ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் காதுகளில் மர்ம கருவி.. எதற்கு தெரியுமா?

0
396

பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் இங்கிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது . ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 16ஆம் தேதி துவங்கியது .

நான்காம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இதனைத் தொடர்ந்து முதலெனில் சீழ் பெற்ற ஏழு ரன்கள் முன்னிலையின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணிக்கு 281 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது . இந்த இலக்கை துரத்தி ஆடிய ஆஸ்திரேலியா நான்காம் நாள் ஆட்டு நேர முடிவில் 107 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது . ஏழு விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் அந்த அணி இன்னும் 174 தங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை மலையின் காரணமாக போட்டி தொடங்கப்படவில்லை .

- Advertisement -

பொதுவாகவே இங்கிலாந்து ஆடுகளங்களில் போட்டிகள் நடைபெறும் போது ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் மற்றும் அணியின் வீரர்கள் பயிற்சியாளர்கள் ஆகியோர் காதுகளில் ஒரு கருவி அணிந்திருப்பதை காணலாம் . இந்தக் கருவி எதற்காக என்று நாம் பலமுறையும் யோசித்ததுண்டு . அது என்ன கருவி? அதை ஏன் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று நாம் இப்பதிவில் காணலாம் .

போட்டிகளின் போது ரசிகர்களும் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் வீரர்களும் காதுகளில் மாட்டிருக்கும் அந்த கருவி ரேடியோ ஆகும் . சிறிய அளவிலான ரேடியோவை தான் அவர்கள் காதுகளில் மாட்டிருக்கிறார்கள் . கிரிக்கெட் போட்டிகளின் போது நாம் டிவிகளில் கேட்கும் வர்ணனை என்பது தொலைக்காட்சி ரசிகர்களுக்காகவே பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படும் வர்ணனையாகும் . இந்த வர்ணனையை போட்டியை நேரில் காணும் ரசிகர்கள் கேட்க முடியாது . ஒவ்வொரு ஓவர்களின் முடிவின் போது மைதானங்களில் அறிவிக்கப்படும் விவரங்களின் மூலம் அவர்கள் ஸ்கோர் மட்டும் விக்கெட்டுகளை அறிந்து கொள்ள முடியும் .

இதைத் தவிர்த்து போட்டியின் ஒவ்வொரு அம்சங்களையும் ரசிக்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் போது மைதானத்தில் இருக்கும் ரசிகர்களுக்காக பிரத்தியேகமான வர்ணனையை பிபிசி மற்றும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஆகிய வானொலி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன . இவற்றின் மூலம் போட்டியை நேரில் ரசித்துக்கொண்டே அவற்றின் வர்ணனைகளையும் கேட்க ரசிகர்களால் முடியும் .

- Advertisement -

ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போன்ற வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளை நேரில் காணும் போது இது போன்ற வர்ணனைகளுடன் போட்டியை காண்பது மேலும் சுவாரசியத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் வகையில் இருக்கிறது . இது போன்ற வசதிகள் இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது . குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கென்றே பிரத்தியேகமான வர்ணனை அதற்கான அலை வரிசையில் ஒலிபரப்பபடுகிறது .

மேற்கிந்திய தீவுகள் போன்ற நாடுகளிலும் ரசிகர்களுக்காக பிரத்தியேக வர்ணனை வானொலியின் மூலம் ஒலிபரப்பபடுகிறத. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போல சிறிய ரக ரேடியோக்கள் அங்கு கொடுக்கப்படுவதில்லை . அங்கு நம் நாடுகளில் பயன்படுத்துவதைப் போன்ற ட்ரான்சிஸ்டர் மற்றும் சாதாரண ரேடியோக்களை பயன்படுத்தி ரசிகர்கள் கிரிக்கெட் வர்ணனைகளை கேட்பதை நாம் காணலாம்