“தோனி அமைதியா இருக்கிறதால என்ன நல்லது தெரியுமா?.. என் அதிர்ஷ்டம்” – பாப் டு பிளிசிஸ் பேச்சு!

0
108
Faf

கிரிக்கெட் உலகில் தனி பாணியில் முத்திரை பதித்தவர் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. களத்தில் அவர் காட்டிய அமைதி அதற்கு முன்னால் வேறு எந்த கேப்டன்கள் இடமும் பார்க்காத ஒன்றாக இருந்தது.

அவருடைய இந்த பண்பு மொத்த அணியினரையும் பதட்டமில்லாமலும், அவர் மேல் நம்பிக்கை கொள்ளும் விதமாகவும் இருக்க வைத்தது. இதனால் பல நெருக்கடியான நேரங்களில் அணியினர் ஒன்றாக சேர்ந்து சிறப்பாக செயல்பட்டு மீண்டு வருவார்கள்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை எவ்வளவு வெற்றிகரமாக அமைந்தது, அதைவிட கொஞ்சம் அதிகமாகவே அவருடைய ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்தது.

இதுவரையில் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் அதிக முறை பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிகளுக்கு சென்று இருக்கிறது. மேலும் மும்பை உடன் அதிக முறை கோப்பையை வென்ற சாதனையையும் பகிர்ந்து இருக்கிறது.

மகேந்திர சிங் தோனி உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய, தற்பொழுது ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் கேப்டனாக இருக்கின்ற பாப் டு பிளிசிஸ் அவர் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி குறித்து அவர் கூறும் பொழுது ” முதலாவதாக ஒரு இளைஞனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் அங்கம் வகித்தது மகிழ்ச்சியாக இருந்தது. எனது ஆரம்ப காலகட்டத்தில் பிளம்மிங் மற்றும் தோனி இருவரும் இருந்த இடத்திலிருந்து, கற்றுக் கொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். மேலும் முதல் சீசனில் நிறைய கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டேன்.

மேலும் தோனி போன்ற சிறந்த தலைமைகளின் கீழ் விளையாடும்போது, உங்களுக்கான வேலைகளை நீங்கள் செய்து கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வீர்கள். அதே சமயத்தில் எல்லா நேரத்திலும் வெவ்வேறு பாணிகளை ஜெராக்ஸ் எடுப்பது என்பது கடினம்.

மகேந்திர சிங் தோனியை கேப்டன் கூல் என்று அழைப்பதற்கு சரியாக அவர் மிகவும் அமைதியாக இருப்பார். அழுத்தத்தின் கீழ் அமைதியாக இருப்பது மிகவும் முக்கியம். அப்படி அவர் அமைதியாக இருந்ததால்தான் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தின் கீழ் நன்றாக செயல்பட்டார்கள். அவருக்கு கீழ் நான் விளையாடியது பெரிய அதிர்ஷ்டம்” என்று கூறி இருக்கிறார்!