என் கனவு என்ன தெரியுமா? கப் நமக்குதான் கவலையை விடுங்க” – ஆசிய கோப்பைக்கு தேர்வான திலக் வர்மா மாஸ் ஸ்பீச்!

0
358
Tilak

உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வரும் 20 வயதான இளம் இடதுகை பேட்ஸ்மேன் திலக் வருமா ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்!

கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அறிமுகமான இவரின் பேட்டிங் அனைவரும் கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. அதற்குக் காரணம் இவருடைய அதிரடியான ஆட்டம் மட்டும் கிடையாது, பொறுப்பை எடுத்துக்கொண்டு அவர் வெளிப்படுத்திய புத்திசாலித்தனமான ஆட்டமும் காரணம். சூரியகுமார் ஆரம்ப கட்டத்தில் கிடைக்காத பொழுது இவரே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங்கில் வலிமை சேர்த்தார்.

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் சூரியகுமார் திரும்பி வந்த பிறகு, அணிக்கு எந்த இடத்தில் பேட்டிங் செய்வதாக இருந்தாலும் அதற்கு தயாராக இருந்தார். அதேபோல் அணிக்கு எந்த இடத்தில் அனுப்பப்பட்டாலும், நிலைமையை மனதில் வைத்து அதற்கு ஏற்றது போல் விளையாடினார்.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் குட் புக்கில் இடம் பிடித்த திலக் வர்மா, இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் வெகு சீக்கிரத்தில் திலக் வர்மாவை பார்க்கலாம் என்று ரோகித் சர்மாவையே சொல்ல வைத்தார்.

இந்த நிலையில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் தனது முதல் அறிமுகத்தை இந்திய அணிக்காக பெற்றார். முதல் தொடரிலேயே மிகச் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் எடுத்தார். அப்போதிருந்தே இவரை ஆசியக் கோப்பை இந்திய அணியில் மட்டும் இல்லாது, உலகக் கோப்பை இந்திய அணிகளும் தேர்வு செய்ய வேண்டும் என்ற பேச்சுகள் எழுந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து திலக் வர்மா கூறும் பொழுது ” இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு நான் விளையாடுவது போல எப்பொழுதும் கனவு கண்டு வந்தேன். அதுவும் ஒரே ஆண்டில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் எனக்கு இந்திய அணிக்கான அறிமுகம் கிடைத்திருக்கிறது. திடீரென்று ஆசியக் கோப்பைக்கான அழைப்பு வருகிறது. ஆம் இது எனது கனவுகளில் ஒன்று. ஆம் நான் இதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுவதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் நான் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். எனது மாநில அணிக்காகவும் மேலும் லிஸ்ட் ஏ அணிகளுக்காகவும் நான் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். என்னால் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் நான் அதற்காக காத்திருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!