“சிராஜ் இன்னைக்கு என்ன என்ன மேஜிக் பண்ணி இருக்காரு தெரியுமா?!” – புட்டு புட்டு வைத்த இர்பான் பதான்!

0
3503
Siraj

இந்தியா அணிக்கு மிகத் தேவையாக இருந்தது ஒரு நம்பிக்கை. இன்று ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக, தனி ஒரு வீரராக இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கொண்டு வந்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் தான் வீசிய முதல் 16 பந்துகளில் 5 இலங்கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே ஒட்டுமொத்த போட்டியையும் இந்தியாவின் பக்கம் கொண்டு வந்துவிட்டார்.

- Advertisement -

இலங்கை அணி 50 ரன்களில் சுருட்டி, இந்தியா மிக எளிதான வெற்றி பெற்று, சில வருடங்களுக்குப் பிறகு ஒரு பெரிய தொடரை வென்று நம்பிக்கை பெற்றிருக்கிறது. ஆறு விக்கெட் வீழ்த்திய சிராஜ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிராஜ் செயல்பாடு குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறுகையில் “முகமது சிராஜின் பந்தில் ஸ்விங்கின் அளவு சீராக இருக்கிறது. அதே சமயத்தில் லேட் ஸ்விங் மற்றும் கண்ட்ரோல் இருந்தது. இதன் காரணமாகத்தான் முகமது ஷமி போன்ற ஒரு வீரர் வெளியில் அமர்ந்திருக்கிறார். முகமது ஷமி போன்று அப்ரைட் சீமில் விக்கெட் வீழ்த்தும் ஒரு வேகப்பந்துவீச்சாளர், எந்த சர்வதேச அணியிலும் வெளியில் அமர்ந்திருக்க மாட்டார்.

எனவே சமிக்கு பதில் விளையாடும் வீரர் யார் என்று பார்க்க வேண்டும். சிராஜ் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து, மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறார். இப்படி சிறப்பாக செய்தால் மட்டுமே ஷமி வெளியில் இருக்க முடியும். சிராஜ் அப்படி சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் இன்று அவர் செய்தது சிறப்பிலும் சிறப்பு.

- Advertisement -

இலங்கை பேட்ஸ்மேன்கள் இன்னும் கொஞ்சமாவது சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் முகமது சிராஜ் அவர்களை தவறு செய்ய கட்டாயப்படுத்தினார். அது உயர்தரமான பந்துவீச்சு. அவர் பேட்ஸ்மேன்களை டிரைவ் ஆட செய்து விக்கெட் கைப்பற்றினார்.

சதீர சமரவிக்ரமா விக்கெட்டை கைப்பற்ற ஸ்கொயர் லெக் திசையில் பீல்டரை வைக்காமல், இன் ஸ்விங் வீசி, அவரை ஆடச் செய்து விக்கெட் கைப்பற்றினார்.
அவர் அசலங்காவை ஃபுல் லென்த்தில் வீசி ஏமாற்றினார். பந்து விலகிச் செல்கிறது அல்லது நேராக வருகிறது. இல்லையென்றால் கோணத்தை பயன்படுத்தி வீசுகிறார். புதிய பந்தில் ஸ்லாட்டில் 4 மீட்டர் தூரத்தில் வீசுவது மோசமான ஒன்று கிடையாது என்பதை இன்று அவர் காட்டி இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!