இப்பவே தல சுத்துதே!.. தல தோனி மகளின் ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா?.. வெளியான ஆச்சரிய தகவல்!

0
883

இந்தியா அணிக்கு டி20 உலக கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை வாங்கித் தந்த ஒரே இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2004 ஆம் ஆண்டு இறுதியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானவர்.

2005 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மூன்றாவது வீரராக களம் இறங்கி 148 ரன்களை அதிரடியாக விலாசினார். அதன்பிறகு கிரிக்கெட்டில் தோனிக்கு என்றுமே ஏறுமுகம் தான். தொடர்ந்து அரை சதம் மற்றும் சதமாக அடித்து தூள் கிளப்பிய தோனிக்கு 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது .

- Advertisement -

பரபரப்பான அந்தப் போட்டியில் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் என்று அசத்தியது. அதன் பிறகு இந்திய ஒரு நாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனி 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் வைத்து நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா அணி உலகச் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்ததோடு அணியை சிறப்பாகவும், அந்த தொடர் முழுவதும் வழி நடத்தினார் .

மேலும் 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று கொடுத்தார் . இவரது தலைமையின் கீழ் இந்தியா உலக கிரிக்கெட்டில் சக்திவாய்ந்த அணியாக உருவாகியது. 2020 ஆம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் சிஎஸ்கே அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது..

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி சாக்‌ஷி சிங்கை திருமணம் செய்து கொண்டார் தோனி . இந்த தம்பதியினருக்கு 2015 ஆம் வருடம் பிப்ரவரி ஆறாம் தேதி ஜிவா தோனி என்ற மகள் பிறந்தார் . அப்போது உலகக்கோப்பைக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருந்ததால் தோனி மகளைப் பார்க்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எம் எஸ் தோனி எவ்வளவு புகழுக்கு சென்றாலும் தன்னுடைய மக்களையும் மண்ணையும் என்றுமே மறந்ததில்லை. தனது சொந்த ஊரில் தான் இன்று வரை வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

தோனி நினைத்தால் தனது மகளை உலகில் எந்த நாட்டிற்கும் சென்று படிக்க வைக்க முடியும் . ஆனால் அவர் தனது மகளை ராஞ்சியில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் தான் படிக்க வைத்திருக்கிறார். அவரது மகள் ராஞ்சியில் இயங்கி வரும் டாரியன் வேர்ல்ட் ஸ்கூல் என்ற பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் இதற்கு அந்தப் பள்ளி கட்டணமாக ஒரு ஆண்டிற்கு 2,75,000 ரூபாய் வசூல் செய்கிறது என அந்தப் பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்திருக்கிறது. வருடத்திற்கு இரண்டே முக்கால் லட்சம் என்பது தோனிக்கு ஒரு பெரிய தொகை இல்லை என்றாலும் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு ரெண்டே முக்கால் லட்சம் ஒரு வருடத்திற்கு என்றால் தலை சுற்ற தான் செய்கிறது.