“2018 தென் ஆப்பிரிக்காவில் கோலி தயாரானது எப்படி தெரியுமா? சொன்னா நம்ப மாட்டிங்க!” – முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் தகவல்!

0
291
Virat

இந்திய அணி இதுவரை மேற்கொண்ட எட்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணங்களில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை அந்த மண்ணில் வென்றது கிடையாது.

ஆனால் இந்த வரலாற்றை மாற்றியமைக்க விராட் கோலிக்கு கேப்டனாக இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தது. 2018ல் கிடைத்த வாய்ப்பு கொஞ்சம் கடினம், அதே சமயத்தில் 2021 ஆம் ஆண்டு மிகச் சிறப்பான வாய்ப்பு கிடைத்து வீணடிக்கப்பட்டது.

- Advertisement -

2021 ஆம் ஆண்டு அனுபவம் குறைவான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் வெற்றி பெற்று, அடுத்த டெஸ்டில் விராட் கோலி விளையாட முடியாமல் போக, தொடர்ந்து இரண்டு டெஸ்டில் தோற்று இந்திய அணி தொடரை இழந்தது.

2018 ஆம் ஆண்டு முழு நேர கேப்டனாக வெளிநாட்டுக்கு இந்திய அணியை தென் ஆப்பிரிக்காவுக்கு விராட் கோலி அழைத்துச் சென்றார். முதல் டெஸ்டில் இந்திய அணிக்கு தோல்வி வர, இரண்டாவது டெஸ்டில் மிகச் சிறப்பாக விளையாடிய 153 ரன்கள் அடித்தார். அவருடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் இதுவாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் 2018 தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணிக்கு இருந்தவர் சஞ்சய் பாங்கர். இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கும், தற்பொழுது பஞ்சாப் அணிக்கும் பயிற்சியாளராக வந்திருக்கிறார்.

- Advertisement -

2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் விராட் கோலி எப்படி பேட்டிங்கில் வேகப்பந்துவீச்சை சமாளிக்க தயாரானார் என்பது குறித்து ஆச்சரியப்படத்தக்க தகவலை கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “2018 கேப்டவுன் டெஸ்டில் மோர்னே மோர்கலிடம் விராட் கோலி ஆட்டம் இழந்த பொழுது மனம் உடைந்து போனார். ஆனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு மிகச் சிறப்பாக தயாரானார். அப்படி தயாராகும் ஒருவரை நான் அரிதாகவே பார்த்திருக்கிறேன். அவர் அதற்காக அதிவேகமாக பந்துகளை வீசி வைத்து பயிற்சி மேற்கொண்டார். இரண்டு மூன்று பந்துகள் ஹெல்மெட்டை தாக்கியது.

அந்தத் தொடரில் மொத்த அணி எடையையும் அவர்தான் சுமந்தார். அந்தச் சவாலுக்கு அவர் அப்பொழுது மிக நன்றாகத் தயாரானார். அவர் வலையில் பயிற்சி செய்யும் பொழுது அதிவேக பந்துவீச்சாளர்களை சந்தித்தார். இதன் மூலமாக சிறந்த விளையாட்டை தருவதற்கான வாய்ப்பை எங்களுக்கு கொடுத்தார்!” என்று கூறியிருக்கிறார்!