அம்மாடியோ இவ்ளோ கோடியா!.. தோனி வேர்ல்ட் கப் வின்னிங் ஷாட் அடிச்ச பேட் ஏல தொகை எவ்வளவு தெரியுமா.?

0
968

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் முதன்மையானவர் எம்எஸ் தோனி. இந்திய அணிக்கு யாராவது ஒரு ஐசிசி கோப்பையை வாங்கி தர மாட்டார்களா என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவிற்கு இரண்டு உலகக் கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை பெற்று தந்தவர் மகேந்திர சிங் தோனி.

அதிலும் குறிப்பாக 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது கௌதம் கம்பீர் உடன் இணைந்து தோனி ஆடிய இன்னிங்ஸ் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச் சிறந்த கேப்டன் இன்னிங்ஸ் ஆக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நான்காவது விக்கெட் இருக்கு ஜோடி சேர்ந்த தோனி மற்றும் கம்பீர இருவரும் இணைந்து 109 ரன்களை சேர்த்தனர் . இது இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டதோடு வெற்றிக்கும் அழைத்துச் சென்றது. அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய கம்பீர் 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று விளையாடிய மகேந்திர சிங் தோனி 79 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் எட்டு பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டம் விளக்காமல் களத்தில் இருந்தார் ..

அதிலும் தோனி நுவன் குலசேகராவின் பந்தில் அடித்த வின்னிங் ஷாட் சிக்சர் இந்த ஒரு இந்திய ரசிகராலும் மறக்க முடியாது . ஒவ்வொரு இந்தியனின் நினைவிலும் கனவிலும் மறக்க முடியாத காட்சியாக அந்த சிக்சர் அமைந்து இருக்கிறது . இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நான் இறப்பதற்கு முன்னால் தோனி அடித்த அந்த சிக்சரை ஒரு முறை பார்க்க ஆசைப்படுவேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

அத்தகைய சிறப்பு வாய்ந்த சிக்சரை அடித்த தோனியின் பேட் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் லண்டனில் வைத்து நடைபெற்ற தோனியின் ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட் அறக்கட்டளைக்காக ஏலம் விடப்பட்டது . இந்த ஏலத்தின் போது ஆர்கே குளோபல் ஷேர் & செக்யூரிட்டி என்ற நிறுவனம் ஒரு லட்சம் பிரிட்டிஷ் பவுண்டு விலை கொடுத்து தோனியின் பேட்டை ஏலத்தில் எடுத்தது. இது இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாயாகும் .

- Advertisement -

மேலும் இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்று இருக்கிறது . உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட கிரிக்கெட் பேட் ஆக தோனி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பயன்படுத்திய பேட் இடம் பெற்றுள்ளது. இந்த பேட் 161,295 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது . மேலும் இதனைப் பற்றிய செய்திகள் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இடம்பெற்று இருக்கின்றது .

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 274 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஆரம்பத்திலேயே சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் 114 ரன்கள் ஆக இருக்கும்போது விராட் கோலி ஆட்டம் இழந்தார். அதன்பின்பு தோனி மற்றும் கம்பீர இருவரும் இந்தியாவை சரிவிலிருந்து வீட்டு உலகக்கோப்பை வெள்ளை காரணமாக அமைந்தனர். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஒரு கேப்டன் இன்னிங்ஸ் விளையாடினார்.