2023 ODI உலக கோப்பை சென்னை சேப்பாக்கம் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!

0
524
Cheppak

தற்பொழுது கிரிக்கெட்டில் மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இறுதியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியதில் இருந்து மூன்று தொடருக்கும் உலகக் கோப்பைகள் நடைபெறுகின்றன!

மூன்று வடிவத்திற்கு மூன்று உலகக் கோப்பைகள் இருந்தாலும், நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு நடைபெறும் உலகக் கோப்பைக்கு ரசிகர்களிடம் எப்பொழுதும் வரவேற்பு மிக அதிகமாக இருக்கும்.

- Advertisement -

இந்த முறை 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. 96 மற்றும் 2011ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகள் இந்தியாவில் முழுமையாக நடத்தப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு நடத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் முழுமையாக நடத்தப்படுகிறது.

இந்த உலகக் கோப்பைத் தொடர் குஜராத், டெல்லி, கொல்கத்தா, மும்பை, தர்மசாலா, புனே, ஹைதராபாத், பெங்களூர், சென்னை மற்றும் தர்மசாலா என்று 10 இடங்களில் நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை மற்றும் பெங்களூரில் இந்தியா விளையாடும் போட்டிகள்நடைபெறுகிறது.

அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான மைதானமான ஹைதராபாத்துக்கு இந்தியா விளையாடும் எந்த ஒரு போட்டியும் ஒதுக்கப்படவில்லை. அதே சமயத்தில் தர்மசாலாவில் இந்தியா விளையாடுகிறது. மேலும் கேரளா பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு பயிற்சி போட்டிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டியோடு சேர்த்து மொத்தம் ஐந்து போட்டிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

அக்டோபர் 8: இந்தியா vs ஆஸ்திரேலியா, மதியம் 2 மணி
அக்டோபர் 13: பங்களாதேஷ் vs நியூசிலாந்து, மதியம் 2 மணி
அக்டோபர் 18: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான், பிற்பகல் 2 மணி
அக்டோபர் 23: ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான், பிற்பகல் 2 மணி
அக்டோபர் 27: பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா

தற்பொழுது இந்தப் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை துவங்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் ஐந்து ஸ்டாண்டுகளுக்கான டிக்கெட் விற்பனை திறக்கப்பட்டு உள்ளது. டிக்கெட்டின் விலை 1000, 1500, 2500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ஐபிஎல் தொடர் நடந்த பொழுது டிக்கெட் விலை பத்தாயிரம் கொடுத்தும் கிடைக்கவில்லை என்கின்ற செய்திகள் நாம் பார்த்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது!