அடேங்கப்பா.. 2023-27-ல் பிசிசிஐ-க்கு வர இருக்கும் வருமானம் எவ்வளவு?.. ஐபிஎல் இல்லாமலே இவ்வளவு வருதே..!

0
296

2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை உள்நாட்டில் இந்தியா விளையாட இருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் அடுத்த 4 வருடங்களுக்கான சீசன் தொடங்க இருக்கிறது.

இதில் முதல் கட்டமாக இந்தியா ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. 2023 முதல் 2027 காலகட்டத்தில் 7 அணிகளுடன் 88 போட்டிகளில் விளையாட இருக்கிறது இந்தியா.

- Advertisement -

இதில் 39 போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி உடன் மட்டும் விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியுடன் பத்து டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதைப்போல ஆஸ்திரேலியா அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் ஆறு ஒரு நாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது .

இவை தவிர ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் ஸ்ரீலங்கா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுடனும் டெஸ்ட் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகளை பெறுவதற்கான ஏலம் நடைபெற இருக்கிறது . கடந்த முறை நடைபெற்ற ஏலத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டார் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் டிவி மற்றும் இணையதள ஒளிபரப்பு உரிமையை 6138 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதில் இணையதள ஒளிபரப்பு உரிமைகளை 60 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது

ஆனால் இந்த முறை பிசிசிஐ டிவி ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் இணையதள ஒளிபரப்பு உரிமைகளை தனித்தனியாக ஏலம் விடை இருக்கிறது . இதன் மூலம் இந்த காலகட்டத்தில் பிசிசிஐ-க்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் . இதன் இந்திய மதிப்பு 8,200 கோடி ரூபாய் ஆகும் . ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சோனி மற்றும் ரிலையன்ஸ் வியாக்காம் 18 ஆகிய நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த முறை அமேசான் மற்றும் கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் ஏலத்தில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அணி விளையாட இருக்கும் 88 போட்டிகளில் 39 குட்டிகளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் விளையாட இருக்கிறது. இது மொத்தம் நடைபெறும் போட்டிகளில் 45 சதவீதமாகும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளுடன் விளையாடும் போது விளம்பரத்தின் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் ஒளிபரப்பு உரிமையை எடுக்க கடும் போட்டி நிலவும் என்றும் இதன் மூலம் பிசிசிஐக்கு அடுத்த நான்கு வருடங்களில் வருமானம் பத்தாயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது .

அடுத்த நான்கு வருடங்களில் இந்திய அணி 25 டெஸ்ட் போட்டிகள் 27 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது . இதில் t20 போட்டிகள் அதிகமாக இருப்பதும் ஏலத்தில் அதிக லாபம் கிடைப்பதற்கான ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் விளம்பரங்களை விட டி20 போட்டிகளுக்கு அதிக விளம்பரங்கள் வரும் என்பதால் டிவி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த ஒளிபரப்பு உரிமையை பெறுவதற்கு ஏலத்தில் போராடும் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.