“தோனி யார் தெரியுமா?.. அவர் கடவுள் மாதிரி!” – ஆஸி ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் வியப்பான பேச்சு!

0
368
Green

ஒவ்வொரு துறையிலும் சிலர்தான் தங்களுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாத அளவுக்கு விட்டு செல்கிறார்கள். அதற்குப்பின் எத்தனை பேர் வந்தாலும், குறிப்பிட்ட அந்த ஒருவர் இல்லாதது எப்பொழுதும் வெறுமையை உணர்த்திக் கொண்டே இருக்கும்!

அதேபோல் சிலர்தான் ஒரு துறையில் சாதித்து இருந்தாலும் கூட, அதைத் தாண்டி அவர்களது வாழ்க்கையில் இருந்து அடுத்தவர்கள் எடுத்துக் கொள்வதற்கான செய்திகளை விட்டு வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களுடைய துறைத்தாண்டி பொதுவாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்கள்!

- Advertisement -

இந்த இரண்டுமாகவே இருப்பவர்கள் வெகு அரிதிலும் அரிதானவர்கள். இப்படி இந்த இரண்டுமாகவே இருப்பவர் இந்திய கிரிக்கெட்டின் மற்றும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனான மகேந்திர சிங் தோனி!

மிகவும் எளிய குடும்பப் பின்புலத்தில் இருந்து வந்து, இந்திய கிரிக்கெட்டை ஒரு தசாப்தம் தலைவனாக கட்டி ஆண்டு, தற்பொழுது 42 வயது எட்டி இருக்கும் நிலையிலும் கூட, ஐபிஎல் தொடரில் தனது சிறிய வீரியமிக்க பங்களிப்புகளால், மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கிறார்!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் தனக்கு கடைசி ஐபிஎல் தொடர் என்று அவர் எந்த இடத்திலும் கூறவே இல்லை. ஆனாலும் கூட அவருக்கு இந்த வருடம் ஐபிஎல் தொடர் கடைசி தொடராக இருந்து விட்டால், அடுத்த முறை நேரில் சென்று பார்க்க முடியாமல் போய்விடும் என்று ரசிகர்கள் மைதானங்களுக்கு படை எடுத்தார்கள். இப்படி வந்த ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மட்டும் கிடையாது. அனைத்து ஐபிஎல் அணிகளின் ரசிகர்களும்தான் என்பதுதான் அவருடைய சிறப்பை கூறும் விஷயம்!

- Advertisement -

அவர் ஏதாவது செய்தால் மட்டுமல்ல பேசினால் கூட செய்தியாகும் அளவுக்கு பிரபல தன்மையோடு இருக்கிறார். ஆனால் இதைத் தாண்டி அவர் எப்பொழுதும் அமைதியான ஒரு வாழ்க்கையோடு இருக்க விரும்பக் கூடிய நபராக, புகழ் வெளிச்சத்தின் பரபரப்பிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார். அவர் குறித்து அவருடன் அருகில் இருந்த பலரும் சொல்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது.

இந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் கூறும்பொழுது “மகேந்திர சிங் தோனி ஒரு கடவுள் உருவம் போன்றவர். அவர் சென்னை மைதானத்தில் பேட்டிங் செய்வதற்காக வெளியே வருவதைப் பார்ப்பது, மிகவும் வித்தியாசமான ஒரு உணர்வு. அவர் மிகவும் நல்ல நடத்தைக் கொண்ட மனிதர். அவர் ஒரு அழகான மனிதர். நான் அவருடன் சேர்ந்து களத்தில் இருந்தது அருமையான ஒரு நிகழ்வு!” என்று கூறியிருக்கிறார்,