பாகிஸ்தான் தோத்ததால சொல்லல.. நியாயமே இல்ல ரொம்ப தப்பு.. ஐசிசி இத திருத்தணும்.. கௌதம் கம்பீர் அதிரடி பேச்சு.!

0
10535

பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே நேற்று சென்னையில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த வருட உலகக்கோப்பை போட்டிகளில் தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. மேலும் இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்திற்கு சென்று இருக்கிறது.

முன்னதாக நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 270 ரன்கள் ஆல் அவுட் ஆனது . இதனைத் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா ஈடன் மார்க்ரத்தின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் ஷாகின் அப்ரிதி மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்கா அணி 260 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட்டுகள் இழந்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் அந்த அணியின் மஹராஜ் மற்றும் சம்சி இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 11 ரன்கள் சேர்த்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்தப் போட்டியில் 46வது ஓவரில் ஹாரிஸ் ரவூப் வீசிய பந்து சம்சியின் கால் காப்பில் பட்டது. இது தொடர்பாக அம்பையரிடம் பாகிஸ்தான் வீரர்கள் எல்பி டபிள்யூவிற்கு முறையிட்டனர். அதற்கு அம்பயர் அவுட் கொடுக்காததால் டிஆர்எஸ் எடுத்தனர். டிஆர்எஸ்-ன் போது வால் ட்ராக்கிங்கில் பந்து லெக் ஸ்டெம்பை உரசி சென்றதால் அம்பையர் ஸ்கால் என்று முடிவு வந்தது.

இது சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு சாதகமாக முடிந்தது. எனினும் அந்த அணியின் ரசி வான்டர் டுசன் நேற்றைய போட்டியில் அம்பையர் கால் முறையில் ஆட்டம் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக மகராஜ் மற்றும் சம்சி இருவரும் சேர்ந்து சவுத் ஆப்பிரிக்கா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் விமர்சகர்மான கௌதம் கம்பீர் அம்பையர் கால் முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்” பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவரும் இதே போன்று ஆட்டம் இழந்து இருக்கிறார். எனவே ஐசிசி இந்த முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மிகப்பெரிய போட்டிகளில் இந்த முடிவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பந்து ஸ்டம்பில் பட்டாலே பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்ததாக அறிவிக்க வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்” இன தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் கௌதம் கம்பீர்.

- Advertisement -

மேலும் டிஆர்எஸ் முறை தொடர்பாக இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் டிஆர்எஸ் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியின் வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. அந்த அணி தொடர்ச்சியாக இதுவரை நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற இருக்கும் போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தரம்சாலாவில் நடக்கும் போட்டியில் காலை 10 மணிக்கு விளையாட இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கும் முதல் போட்டி இதுவாகும்.