பாகிஸ்தான் டீம் பத்தி தயவுசெஞ்சு மீம் போடாதிங்க – வாசிம் அக்ரம் வித்தியாச வேண்டுகோள்!

0
206
Wasim Akram

நடப்பு 15வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்றான சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று நடக்கவிருக்கும் நேரம் நெருங்க நெருங்க, இரு அணிகள் தரப்பிடம் இருந்தும், இருநாட்டு முன்னாள் வீரர்கள் இடம் இருந்தும் நிறைய கருத்துக்கள் உணர்ச்சிப் பிழம்பாக வந்து கொண்டிருக்கின்றன!

கடந்த ஆண்டு தற்போது போட்டி நடக்கும் துபாய் மைதானத்தில் டி20 உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு உலகக் கோப்பை தொடரில் தோல்வியைச் சந்தித்தது. இந்த ஒரே ஒரு தோல்வி இந்திய அணியின் கிரிக்கெட்டையே புரட்டிப்போட்டு, இன்று நடந்திருக்கும் எல்லா மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது. அந்த அளவிற்கு அந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி இந்திய அணியை நெருக்கடிக்குள் தள்ளியது.

- Advertisement -

இதற்கடுத்து சரியாக 10 மாதங்கள் கழித்து ஆசியக் கோப்பை தொடரில் அதே மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணியை சந்தித்தது. இந்தப் முதல் போட்டி துவங்கும் முன்பு இந்த போட்டிக்குக் பல காரணங்களால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி இருந்தது. இது பழிதீர்க்கும் ஆட்டமாக அமையுமா? அடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுவதற்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று உத்வேகத்தை எடுத்துக்கொள்ள முடியுமா? என்று இரு முக்கிய காரணங்கள் இருந்தது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் இந்திய அணிகள் மோதிய முதல் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரிசப் பண்ட்டை வெளியில் வைத்து தினேஷ் கார்த்திக்கை ஆடும் அணிக்குள் கொண்டுவந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, பேட்டிங்கில் 17 பந்துகளில் 33 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

தற்போது இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட தோல்விக்கும், அதிலிருந்து வெளியே வர வேண்டியதன் அவசியத்தையும் பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் தனது பேட்டியில் குறிப்பிட்டு தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

வாசிம் அக்ரம் இது பற்றி பேசும் பொழுது ” எனக்கு ஹர்திக் பாண்டியாவை பிடிக்கும். காரணம் அவர் குறிப்பாக டி20 வடிவத்தில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்பதால். பாகிஸ்தான் அணியில் சதாப் கான் இருக்கிறார். ஹர்திக் பாண்டியா மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறார். அவர் ஒரு மிகத் திறமையான பீல்டரும் கூட. அவர் பேட்டிங் செய்ய வரும் பொழுது துளிக் கூட பயமில்லாமல் வருகிறார். பாகிஸ்தான் அணி தான் பெற்ற முதல் தோல்வியில் இருந்து உடனடியாக வெளியே வரவேண்டும். சமூக வலைதளங்களில் நாம் பாகிஸ்தான் அணி குறித்து மீம்ஸ் செய்வதும் ஒரு காரணமாக இருக்கலாம் இது நியாயம் கிடையாது” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நான் பாகிஸ்தானாக இருப்பதால் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இந்தியா பாகிஸ்தான் அணியுடன் ஒரு வெற்றிக்குப் பிறகு வருகிறது. இந்திய அணி சமீப காலங்களில் பெற்ற வெற்றியால் அதிக நம்பிக்கையோடு இருக்கிறது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் நாடு திரும்பியுள்ளார் ஆனால் அவருக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜா இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்தார் கடந்த ஆட்டத்தில் அவரும் ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தனர். அந்த நேரத்தில் இந்தியாவும் ஜடேஜாவை ஊக்குவித்தது. இதனால்தான் டி20 கிரிக்கெட் விளையாடும் பொழுது பாகிஸ்தான் அணியும் சில ரிஸ்க் எடுக்க வேண்டும் ” என்று விளக்கமாகக் கூறினார்!