கோலிக்கு செஞ்சத கில்லுக்கு செய்யுங்க.. இல்லனா பையன் பாவம் – ஹர்பஜன் சிங் பிசிசிஐ-க்கு வெளிப்படையான கோரிக்கை!

0
580
Gill

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஷிகர் தவானுக்கு கடைசி தொடராக இருக்கும் என்று பல கிரிக்கெட் நிபுணர்களும் கணித்திருந்தார்கள்!

இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் அவரது இடத்திற்கு இளம் வீரர் சுப்மன் கில்லை கொண்டு வந்தது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம். அதற்கேற்றார் போல் அவருடைய பேட்டிங் செயல்பாடும் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

கடந்த வருடத்தில் அவர் இந்திய மண்ணில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார்.

மேலும் தொடர்ந்து இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி மூன்று சதங்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த வீரராக முதலில் வந்தார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் சுப்மன் கில் இந்தியாவின் அடுத்த விராட் கோலி என்று கூறி வந்தார்கள். மேலும் அவருடைய பேட்டிங் டெக்னிக் மிகவும் சிறப்பான ஒன்றாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் நடப்பு ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்திருந்தது. இந்தச் சுற்றுப்பயணத்தின் மூன்று தொடர்களிலும் சுப்மன் கில் பேட்டிங் திடீரென சரிந்தது. உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்க இது இந்திய அணி நிர்வாகத்திற்கு கவலை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” இதற்கு காரணம் அதிக கிரிக்கெட் விளையாடுவதுதான் என்று நான் நினைக்கிறேன். அவர் இப்போது சில காலமாக தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவருக்கு ஒரு சிறந்த ஐபிஎல் இருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் கொஞ்சம் ஓய்வு தேவை. ஏனென்றால் ஐபிஎல் மிகவும் கடினமான ஒரு தொடராகும். ஒவ்வொரு போட்டிக்கும் பயணம் செய்து விளையாட வேண்டியதாக இருக்கும். அவருக்கு ஒரு இடைவெளி தேவை. அவர் ஒரு தரமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவருக்கு இடைவெளி கொடுத்தால் அவர் மீண்டும் திரும்பி வந்து நிறைய ரன்கள் எடுப்பார். மேலும் அவருடைய பேட்டிங் டெக்னிக்கில் எந்த தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர் பேட்டிங் செய்யும் விதத்தில் நம்பிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கிறது. அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுத்தால் அவர் நம்பிக்கையாக திரும்பி வருவார்!” என்று கூறியிருக்கிறார்!

விராட் கோலி இப்படியான பேட்டிங் ஃபார்ம் சரிவில் இருந்த காலத்தில், கடந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக அவருக்கு இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒருமாத காலம் ஓய்வு அளித்தது. அவர் அப்பொழுது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலந்து கொள்ளவில்லை. பிறகு திரும்பி ஆசிய கோப்பைக்கு வந்த அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது!