தெறிக்கவிட்ட தினேஷ் கார்த்திக்; 4 பவுண்டரி 4 சிக்சர்கள்; வீடியோ இணைப்பு!

0
6687
DK

தென்ஆப்பிரிக்கா அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தூர் மைதானத்தில் இந்திய அணி தற்போது மோதி வருகிறது!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஸ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

பேட்டிங் சாதகமான ஆடுகளத்தில் சிறிய மைதானத்தில் தென்ஆப்பிரிக்க இடதுகை பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. குயின்டன் டி காக் அதிரடியாக அரைசதம் அடிக்க, ரூஸோவ் 68 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தினார். 50 ஓவர்களின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 227 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களம் கண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். துவக்க ஆட்டக்காரராக வந்த ரிஷப் பண்ட் ஒரு சிறிய அதிரடி காட்டி, வழக்கம்போல் தேவையில்லாத பந்தை ஆடி ஆட்டமிழந்தார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயரும் உடனே வெளியேறினார்.

இதற்கடுத்து தினேஷ் கார்த்திக் களத்தில் சிறிது நேரமே நின்றாலும் அதிரடியில் தென்ஆப்பிரிக்கா அணியை அந்த நேரத்தில் மொத்தமாக அச்சுறுத்தி விட்டார். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி தொடர்ந்தால் தோற்று விடுவோம் என்று தென்ஆப்பிரிக்க வீரர்கள் நினைக்குமளவுக்கு அவரது ஆட்டம் அதிரடியாக இருந்தது.

- Advertisement -

21 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்து அசத்தினார். கேசவ் மகாராஜின் ஓவரில் 2 சிக்சர்கள் வெளுத்த அவர், அந்த ஓவரின் கடைசி பந்தை மட்டும் கொஞ்சம் பொறுமையாக ஆடி இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும். தினேஷ் கார்த்திக் நல்ல பேட்டிங் டச்சில் இருப்பது இந்திய அணி நிர்வாகத்துக்கு மகிழ்ச்சியான விஷயம். அவரது அதிரடி பேட்டிங் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!