முன்னாள் சக கொல்கத்தா வீரர் இயான் மோர்கன் ஓய்விக்கு தினேஷ் கார்த்திக் டுவீட்

0
271
Dinesh Karthik and Eoin Morgan

கிரிக்கெட்டை கண்டுபிடித்தவர்கள் என்ற,பெருமையைத் தவிர இங்கிலாந்திற்கு கிரிக்கெட்டால் பெருமைப்படும் பெரிய தருணங்கள் எல்லாம் பெரிதாய் வாய்த்ததே கிடையாது. ஆஸ்திரேலியா உடனான ஆசஷ் தொடரிலும் கூட இங்கிலாந்தின் ஆதிக்கம் பெரிதாய் இருந்ததில்லை. ஐ.சி.சி நடத்தும் உலகக்கோப்பை தொடர்கள் சொந்த நாட்டில் நடந்தாலும் கூட இங்கிலாந்து அதிகபட்சம் அரையிறுதியைத் தொடுவதே பெரிய விசயம்.

இங்கிலாந்து நாட்டைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகத் தீவீரமான இரசிகர்கள் நிறைய உண்டு. ஐந்து நாள் நடக்கும் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் அல்லாம, இங்கிலாந்து உள்நாட்டு கவுன்டி அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகளுக்குக் கூட பெரியளவில் இரசிகர்களின் ஆதரவு இருக்கும். அன்றாட வாழ்க்கையில் சூரிய வெளிச்சம் போல் மழையும் ஒன்றான இங்கிலாந்து தட்வவெப்பத்தைத் தாண்டி இங்கிலாந்து மக்கள் கிரிக்கெட்டிற்கு ஆதரவளிப்பார்கள்.

- Advertisement -

இப்படிப்ப கிரிக்கெட் இரசிகர்கள் இருக்கும் நாடு ஒருமுறை கூட ஐ.சி.சி நடத்தும், எல்லா கிரிக்கெட் நாடுகளும் வெல்ல விரும்பும் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதே இல்லை. இது இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு ஒரு மிகப்பெரிய குறையாவே இருந்து வந்தது. இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு இயான் மார்கனின் தலைமையில், ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையில் முதல் சுற்றோடு தோற்று வெளியேறி இருந்தும் கூட, அடுத்து இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக்கோப்பைக்காக அவரை முழுதாய் நம்பியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

2015-2019 இடையே நான்கு வருடங்கள் புதிய திட்டங்களோடு இயான் மோர்கன் தலைமையில் உழைக்க ஆரம்பித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் உலக கிரிக்கெட் நாடுகளை அச்சுறுத்தும் ஒரு அணியாக மாறியிருந்தது. அணியை முன்நின்று பக்குவமாய் புத்திசாலித்தனமாய் வழிநடத்தும் ஒரு தலைவராக இயான் மோர்கன் இருந்தார். மெல்ல மெல்ல முன்னேறிய இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்று, தங்களின் பலநாள் கிரிக்கெட் தாகத்தையும் தீர்த்துக்கொண்டது.

இவ்வளவு பெரிய முக்கியத்துவம் உள்ள சாதனையைச் செய்திருந்த இயான் மோர்கன் தனது ஓய்வை அறிவித்திருந்தார். இதற்கு பல வீரர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் புகழுரைகளையும் வெளியிட்டு வருகிறார்கள். இந்த வகையில் இயான் மோர்கனோடு 2020-21 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக் தனது வாழ்த்துக்களையும், அவருடனான தனது நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதில் தினேஷ் கார்த்திக் கூறியிருப்பதாவது “இங்கிலாந்து பல ஆண்டுகளாக அடைய உதவியவர். கொல்கத்தா அணியில் நான் உங்களுடன் கழித்த காலத்தில் உங்களின் தலைமையையும், அழகான குணத்தையும் அனுபவித்தேன். உங்களுக்கும் டாரா மற்றும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்!