இவருக்குத்தான் தொடர் நாயகன் விருது தந்திருக்க வேண்டும்.. அஸ்வின் கருத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக்

0
109
Dinesh

இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யாருக்கு தொடர் நாயகன் விருது தந்திருக்க வேண்டும்? என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

தற்போது நியூசிலாந்து இளம் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவிந்த்ராவுக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது. அவர் இரண்டு சதங்கள் இந்த தொடரில் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக ரன்கள் எடுத்த அவருக்கே தொடர் நாயகன் விருதும் கொடுக்கப்பட்டு விட்டது.

- Advertisement -

அஸ்வின் தெரிவித்திருந்த கருத்து

இதுகுறித்து அஸ்வின் பேசியிருந்த பொழுது பொதுவாக தொடர் நாயகன் விருது என்பது தொடரில் ஒருவர் எந்த அளவிற்கு தாக்கத்தை செலுத்தினார் என்ற அளவீட்டின் படி தர வேண்டும் என்று கூறியிருந்தார். இதன்படி பார்த்தால் குறைந்த போட்டிகளில் விளையாடி 9 விக்கெட் கைப்பற்றியுள்ள வருண் சக்கரவர்த்திக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ரச்சின் ரவீந்தரா பேட்டிங் செய்ய சாதகமான பாகிஸ்தானில் விளையாடி இரண்டு சதங்கள் எடுத்தார். அதே சமயத்தில் பேட்டிங் செய்ய கடினமான துபாய் மைதானத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இவருக்கு தொடர் நாயகன் விருது தந்திருக்கக் கூடாது என்கின்ற விமர்சனங்கள் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்

துபாயில் பேட்டிங் செய்ய கடினமான சூழ்நிலையில் விராட் கோலி ஐந்து போட்டிகளில் 218 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் அனைத்துப் போட்டிகளிலும் அணிக்கு தாக்கத்தை தரக்கூடிய வகையில் விளையாடி 243 ரன்கள் எடுத்திருந்தார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் ஒவ்வொரு போட்டியிலும் பார்ட்னர்ஷிப் உருவாக்கிய விதமும் சூழ்நிலையும் மிகவும் முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 74% ரோகித் சர்மா.. இந்த கதை தெரியுமா?.. அவரை நினைச்சு பெருமைப்படுங்க – ஏபி டிவில்லியர்ஸ் கருத்து

இந்த நிலையில் தொடர் நாயகன் விருது யாருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்பதில் தினேஷ் கார்த்திக் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் முரண்பட்டு கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசும் பொழுது “ஸ்ரேயாஸ் மிகவும் சீரானவராக ரங்கள எடுப்பதில் இருந்தார். அவர் ஒவ்வொரு முறையும் அழுத்தத்தின் கீழ் ரன்கள் எடுத்திருந்தார். எனவே அவருக்கே தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -