ரோகித் விரும்பிய அது நடக்கல.. ஆனா இனி இந்த விஷயத்துல அவர் படையை தடுக்க முடியாது – தினேஷ் கார்த்திக் பேச்சு

0
999
Rohit

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடக்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கலந்து கொள்வது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் இந்திய அணி விரும்பிய ஒரு விஷயம் நடக்கவில்லை என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு மூன்று வடிவ இந்திய அணிக்கும் ரோஹித் சர்மா முழு நேர கேப்டனாக கொண்டுவரப்பட்டார். இங்கிருந்து மாறிவரும் உலக கிரிக்கெட்டுக்கு தகுந்தபடி இந்திய கிரிக்கெட்டையும் மாற்றுவதற்கான பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

- Advertisement -

இந்த முயற்சிக்கு ஆரம்பத்தில் பெரிய அளவில் பலன்கள் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் மொத்த திறமையும் வெளியில் வந்தது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்து இருந்தாலும் கூட, அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி வென்றிருக்கிறது. மேலும் பாகிஸ்தானில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வெல்ல ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெரிய ஆர்வம் காட்டுகிறது. எனவே அவர்கள் அதிக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் விரும்பலாம்.

- Advertisement -

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும்பொழுது ” பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணி அதிகப்படியான ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு நிச்சயம் விரும்பி இருக்கும். இருந்தபோதிலும் இந்திய அணி நல்ல அனுபவம் பெற்ற தயாராக இருக்கக்கூடிய அணி. மேலும் டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற காரணத்தினால் இந்திய அணியினரின் நம்பிக்கையும் அதிகமாக இருக்கும்.

இதையும் படிங்க : இலங்கை ODI தொடர்.. இந்திய அணியின் 15 பேர்.. தொடங்கும் நாள் நேரம்.. எந்த சேனல்.. முழு விவரம்

நான் ஒன்று உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன், இனி இந்திய அணியை பல நாடுகள் கலந்து கொள்ளும் தொடர்களில் தடுத்து நிறுத்துவது மிகக் கடினமானது. கடைசியாக வென்றிருக்கும் உலகக்கோப்பை இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -