இலங்கை ODI தொடர்.. இந்திய அணியின் 15 பேர்.. தொடங்கும் நாள் நேரம்.. எந்த சேனல்.. முழு விவரம்

0
11847

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான டி20 தொடரை இந்திய அணி முழுமையாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒரு நாள் தொடர் வருகிற ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்த மூன்று போட்டிகளும் நடைபெறுகிற தேதி, மைதானம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

- Advertisement -

ஒருநாள் தொடருக்கு முன்பாக டி20 தொடரில் இலங்கை அணி விளையாடிய மூன்று போட்டியிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதற்கான தக்க பதிலடி ஒரு நாள் தொடரில் கொடுத்து இந்திய அணியை வீழ்த்தும் முனைப்போடு விளையாட தயாராக உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை டி20 உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் தொடருக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகின்றனர்.

இந்த ஒரு நாள் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணி குறைந்த ஒரு நாள் போட்டிகளிலேயே விளையாட உள்ளது. இதனால் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள மூன்று போட்டிகளும் மிக முக்கியமானதாகும். அது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரைக்கும் ரோகித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள முதல் ஒரு நாள் போட்டி வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி கொழும்பு மைதானத்திலும், இரண்டாவது போட்டி நான்காம் தேதியிலும், மூன்றாவது போட்டி ஏழாம் தேதியிலும் இதே கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்துமே இந்திய நேரப்படி மதியம் 02.30 மணிக்கு தொடங்க உள்ளது.

ஒரு நாள் போட்டிகள் அனைத்தும் டி20 தொடரை போல தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செல்போன்களில் சோனி லைவ் ஆப் மூலமாக நேரடியாக போட்டிகள் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. ஒரு நாள் தொடரில் இடம்பெறாத ஐந்து டி20 வீரர்களான ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜெயிஸ்வால், சூரியகுமார் யாதவ் ஆகியோர் தாயகம் திரும்ப உள்ளனர்.

இதையும் படிங்க: 112 ரன் பார்ட்னர்ஷிப்.. அஸ்வின் மேஜிக் அரைசதம்.. தகுதி சுற்றில் திண்டுக்கல்.. வெளியேறிய சேப்பாக்கம்.. டிஎன்பிஎல் 2024

ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி :இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் லியர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா, ரியான் பராக்,வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்.

- Advertisement -