18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் கோலாகலமான முறையில் நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி அணியை கட்டமைத்தது.
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக் பும்ராவிற்கு பிறகு சிறந்த பந்துவீச்சாளராக தனது சிறந்த வீரரை தேர்வு செய்து இருக்கிறார்.
பும்ராவிற்கு பிறகு இவர்தான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் அணிகளில் வலுவான அணிகளில் ஒன்றாகும்.ஆனால் ஒருமுறை கூட பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் போட்டி அணிகளான மும்பை மற்றும் சென்னை அணி ஐபிஎல் கோப்பைகளை ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கும் நிலையில் பெங்களூர் அணி இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்லாத நிலையில் உள்ளது.
நட்சத்திர வீரர்களை அதிகமாக வாங்கும் ஆர்சிபி சரியான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் அனைத்து சீசன்களிலும் தோல்வியை சந்தித்து வெளியேறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த சீசனில் ஆர்சிபி அணியின் பந்து வீச்சு மோசமான நிலையில் இருந்ததை அடுத்து தற்போது நடைபெற்ற ஏலத்தில் முகமது சிராஜை விடுவித்து புவனேஸ்வர் குமாரை 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கி அணியை வலுவாக அமைத்தது.
ஆர்சிபி அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக்
புவனேஸ்வர் குமார் ஏற்கனவே பெங்களூர் அணியில் விளையாடி இருப்பவர் ஆவார். இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளராக கருதப்படும் நிலையில் ஐபிஎல் தொடரிலும் தனது மிகச் சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இதுவரை விளையாடி வந்த நிலையில் தற்போது பெங்களூர் அணிக்காக விளையாட உள்ள நிலையில் அதன் ஆலோசகரான தினேஷ் கார்த்திக் பும்ராவிற்கு பிறகு புவனேஸ்வர் குமார்தான் சிறந்த பந்துவீச்சாளர் என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:3வது ஆஸி டெஸ்ட்.. மழையால் இந்திய அணிக்கு வந்த சிக்கல்.. இது நடந்தா பைனல் போவது கடினம்.. முழு விபரம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இன்னும் இந்த சாதனைக்காக கூறினால் என்னை பொறுத்தவரை பும்ராவிற்கு பிறகு சிறந்த பந்துவீச்சாளர் என்றால் அது புவனேஸ்வர் குமார் தான் என்று உறுதியாக நம்புகிறேன் அவர் ஒரு சிறந்த டி20 பந்து வீச்சாளர்” என்று கூறியிருக்கிறார். அதனால்தான் பெங்களூர் அணி இவரை கடைசி வரை விடாமல் தங்கள் அணிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த சீசனில் இருந்து பெங்களூர் அணியில் புவனேஸ்வர் குமார் விளையாடுவதை காணலாம்.