3வது ஆஸி டெஸ்ட்.. மழையால் இந்திய அணிக்கு வந்த சிக்கல்.. இது நடந்தா பைனல் போவது கடினம்.. முழு விபரம்

0
1811

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் வெற்றியும் இரண்டாவது போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரஸ்பேனில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பு பறிபோகும் நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. எனவே மூன்றாவது போட்டி வருகிற 14-ஆம் தேதி பிரஸ்பேனில் நடைபெற உள்ளது. இந்திய அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெறவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தகுதி பெற மீதம் இருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று வெற்றி அல்லது 2 வெற்றி ஒரு ட்ரா பெற வேண்டும். இல்லையெனில் அடுத்த அணிகளின் முடிவுகளை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும்.

- Advertisement -

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி பெறாமல் இருந்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான களத்தில் மற்ற அணிகளின் முடிவை சாராமல் இருக்க முடியும். இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு வெற்றி தோல்வியை தாண்டி புதிய சிக்கல் ஒன்று உருவாகி இருக்கிறது. அதாவது மூன்றாவது போட்டி நடைபெற உள்ள பிரஸ்பேன் ஆடுகளம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்திருக்கிறது. ஒருவேளை 3வது டெஸ்ட் மழையால் கைவிடப்பட்டால், கடைசி 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதில் ஒரு போட்டி ட்ரா ஆனால் கூட இந்திய அணி கிட்டத்தட்ட வெளியேறிவிடும்.

அச்சுறுத்தும் மழை வாய்ப்பு

அதாவது மூன்றாவது போட்டி நடைபெறும் ஆடுகளம் முதல் நாள் 50 சதவீத மழை வாய்ப்பும், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் 40 சதவீத மழை வாய்ப்பும், நான்காவது நாளில் 30 சதவீத மழை வாய்ப்பும், ஐந்தாவது நாளில் 40 சதவீதம் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையால் போட்டி நடைபெறாமல் தடை பட்டால் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாகிவிடும்.

இதையும் படிங்க:சின்ன பசங்க பின்னாடி ஒளியாதீங்க.. நம்ம தோல்விக்கு இந்த விஷயம்தான் காரணம் – பாக் அகமது ஷாஜாத் பேட்டி

எனவே மூன்றாவது போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? அல்லது மழையால் பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் மூன்றாவது போட்டி நடைபெற்று இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வருண பகவான் கருணை காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தற்போது இந்திய கிரிக்கெட் அணி பிரிஸ்பேனுக்கு மூன்றாவது போட்டிக்கு முன்பாக சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -