“விராட் கோலி இருந்திருந்தா கதையே வேற.. ரோகித் சரிப்பட்டு வர மாட்டாரு” – தினேஷ் கார்த்திக் பேச்சு

0
129
Rohit

தற்பொழுது ஜார்க்கண்ட் ராஞ்சி மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

நேற்றைய நாளின் முதல் செஷனில் இங்கிலாந்து அணி 112 ரன்கள் முதல் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்து பெரிய நெருக்கடியில் சிக்கியது.

- Advertisement -

இந்த இடத்திலிருந்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தாலும் இந்திய அணியால் ஆட்டத்திற்குள் இன்னும் மிக வேகமாக உள்ளே வந்திருக்க முடியும். இங்கிலாந்து அணியை 200 ரன்களில் கட்டுப்படுத்திக் கூட இருக்க முடியும்.

ஆனால் இந்திய அணி ஜோ ரூட் மற்றும் பென் போக்ஸ்க்கு ஆறாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் கொடுத்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 250 ரன்கள் பக்கம் வந்தது.

அந்த இடத்திலிருந்து மிக வேகமாக இங்கிலாந்து அணியை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் ஜோ ரூட் மற்றும் ராபின்சன் ஜோடிக்கு இந்திய அணி 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 353 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்தது.

- Advertisement -

இந்திய அணி பந்துவீச்சில் பெற்ற துவக்கத்திற்கு குறைந்தபட்சம் 100 ரன்கள் அதிகமாக இங்கிலாந்து அணிக்கு கொடுத்திருக்கிறது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக அமையும். இப்படியான நேரத்தில் களத்தில் இந்திய வீரர்கள் மிகவும் சோர்வான முறையில் காணப்பட்டார்கள். அவர்களிடம் பெரிய உற்சாகத்தை பார்க்க முடியவில்லை.

இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனையில் இருந்த சஞ்சய் மன்ச்ரேக்கர் பேசும் பொழுது ” விராட் கோலி வெளியில் இருந்து ஆற்றலைக் கொண்டு வரக்கூடிய வீரர். மைதானத்தில் வீரர்கள் கொஞ்சம் சலிப்பாக சோர்வாக இருக்கும் பொழுது, அவர் மைதானத்தில் இருக்கும் ரசிகர்களிடம் இருந்து ஆதரவைப் பெற்று, அந்த ஆற்றலை அணிக்கு கொண்டு வருவார். இப்பொழுது வெளிப்படையாக இந்தியா அணி விராட் கோலியை தவற விடுகிறது” என்று கூறினார்.

கிரிக்கெட் வர்ணனையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உடன் இருந்த தினேஷ் கார்த்திக் இதற்கு உடனே பதில் அளிக்கும் பொழுது ” தனக்கு பின்னால் கூட்டத்தை வரவளிக்கும் அபாரமான திறமை விராட் கோலிக்கு இருக்கிறது” என ஏற்றுக் கொண்டார்.