அரை இறுதியில் தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்டா? – ரவி சாஸ்திரி பதிலளிப்பு!

0
18803
Ravi Shasthri

எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் பிரதான சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து தற்போது அரை இறுதியை எட்டி இருக்கிறது!

அரையிறுதி சுற்றில் முதல் குழுவில் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து அணி இரண்டாவது குழுவில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியுடன் நாளை மறுநாள் சிட்னி மைதானத்தில் மோதுகிறது!

- Advertisement -

இன்னும் ஒரு அரை இறுதி போட்டியில் இரண்டாவது குழுவில் முதலிடம் பிடித்த இந்திய அணி முதல் குழுவில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து அணி உடன் அடிலைடு மைதானத்தில் வருகின்ற வியாழக்கிழமை மோதுகிறது!

இந்திய அணி பிரதான சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணி உடன் விளையாடிய பொழுது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தினேஷ் கார்த்திக்குக்கு பதில் இடது கை வீரர் ரிஷப் பண்ட் இடம்பெற்றார்.

இந்த நிலையில் அடுத்து இங்கிலாந்துடன் நடக்க இருக்கும் அரையிறுதி போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் இல்லை ரிஷப் பண்ட் யார் இடம் பெற வேண்டும் என்ற விவாதம் உருவாகி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ” தினேஷ் கார்த்திக் அணிக்கான ஒரு அழகான வீரர். ஆனால் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டம் என்று வரும்பொழுது, இந்த அணிகளின் தாக்குதலை பார்க்கும் பொழுது, உங்களுக்கு வலுவான ஒரு இடது கை ஆட்டக்காரர் தேவை என்று நினைக்கிறேன். இந்திய அணியில் ஒரு மேட்ச் வின்னர் ஆக யார் அதை செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஒரு நாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். நான் அரை இறுதிப் போட்டிக்கு ரிஷப் பன்ட் உடன்தான் செல்வேன். அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் கொண்டு இருக்கிறார் என்பது மற்றும் இதற்கு காரணம் கிடையாது, அவர் அணியில் ஒரு எக்ஸ் பாக்டராக இருந்து அரையிறுதிக்கு கொண்டும் செல்வார் ” என்றும் கூறினார்.

மேலும் இதை விளக்கிப் பேசிய அவர்
” நீங்கள் அடிலைடு மைதானத்தில் விளையாடுகிறீர்கள். அங்கு பக்கவாட்டு தூரம் இரண்டு புறமும் குறைவு. இதைக் கொண்டு இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு தாக்குதலை சீர்குலைக்க உங்களுக்கு ஒரு இடது கை வீரர் தேவை. மேலும் உங்களிடம் அதிகமான வலது கை வீரர்கள் இருந்தால் நீங்கள் ஒருமித்த உணர்வில் தான் விளையாட முடியும். ஆனால் இங்கிலாந்து அணி இடம் இடது வலது என நல்ல தாக்குதல் இருக்கிறது” என்று கூறியவர்…

இன்னும் தொடர்ந்து ” உங்கள் அணியில் உங்களுக்கு ஒரு இடது கை பேட்ஸ்மேன் கட்டாயம் தேவை. நீங்கள் மூன்று அல்லது நான்கு பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்து இருந்த போதும், ஒரு இடது கை பேட்ஸ்மேன் அபாயகரமானவராக இருந்து, உங்களை அந்த ஆட்டத்தில் மீட்டுக் கொண்டு வர முடியும் ” என்று கூறியிருக்கிறார்!