சிராஜுக்காக பும்ரா செய்த காரியம்.. மெய்சிலிர்த்த ரசிகர்கள் – களத்தில் என்ன நடந்தது?

0
152
Siraj

இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிராஜ்க்காக பும்ரா செய்த காரியம் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ள விஷயம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவிற்கு வந்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது.

- Advertisement -

அசத்திய சிராஜ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 27 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்த சிராஜ் பந்துவீச்சு இந்த டெஸ்ட் போட்டியிலும் மிகச் சிறப்பாக அமைந்தது.

சிராஜ் இந்த போட்டியில் மொத்தம் 14 ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டன்கள் செய்த 40 ரன்கள் விட்டு தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். அவர் ஐந்தாவது விக்கட்டை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக கில் அவரை கடைசி நேரத்தில் பந்துவீச்சுக்கு மீண்டும் கொண்டு வந்தார்.

- Advertisement -

பும்ரா செய்த காரியம்

இந்த நிலையில் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்த பும்ரா யார்க்கர் பந்துகளை அதிகம் வீசி இருந்தார். ஆனால் கடைசி விக்கெட் இருந்தபோது தொடர்ந்து நான்கு பந்துகளை வெளியில் வீசினார். இதைப் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

இதையும் படிங்க : என்னை ஏன் ஆட வைக்கனும்?.. 7வது பந்தில் காட்டிய குல்தீப்.. கிரிக்கெட் வல்லுனர்கள் சொன்னது உண்மையானது

இந்த நிலையில் இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் சிராஜ் ஐந்து விக்கெட் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பும்ரா வேண்டுமென்றே நான்கு பந்துகளை தொடர்ச்சியாக வெளியில் வீசிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். தன்னுடைய பார்ட்னருக்காக பும்ரா செய்த காரியம் குறித்து இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -