இந்திய கிரிக்கெட்

தினேஷ் கார்த்திக் ஆல் ஃபார்மேட் இந்திய பிளேயிங் XI தேர்வு.. கபில்தேவுக்கு இடமில்லை.. ரசிகர்கள் கேள்வி

தினேஷ் கார்த்திக் சமீபத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்குமான எல்லா காலத்திலும் ஆனா இந்திய பிளேயிங் லெவனை தேர்வு செய்தார். இதில் மிகப்பெரிய ஆச்சரியமாக இந்திய அணிக்கு முதல்முறையாக கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை பெற்றுத்தந்த கபில்தேவ் பெயர் இடம் பெறவில்லை.

- Advertisement -

எல்லா வடிவ கிரிக்கெட்டுக்கும் பொருந்தக்கூடிய இந்திய வீரர்களைக் கொண்ட பிளேயிங் லெவனை தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதில் துவக்க ஆட்டக்காரர்களாக வீரேந்திர சேவாக் மற்றும் ரோகித் சர்வா இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்

மூன்றாவது இடத்தில் மிகச்சிறந்த சாதனைகளை படைத்திருக்கும் விராட் கோலிக்கு பதிலாக அந்த இடத்தை ராகுல் டிராவிட்டுக்கு கொடுத்திருக்கிறார், மேலும் துவக்க வீரராக பல சாதனைகளை படைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கரை நான்காவது இடத்தில் வைத்திருக்கிறார்.

நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலியை ஐந்தாவது இடத்திலும், சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களான யுவராஜ் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருக்கும் ஆறு மற்றும் ஏழாவது இடங்களை கொடுத்திருக்கிறார். மேலும் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அனில் கும்பளேவை எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த பிளேயிங் லெவனில் பும்ரா மற்றும் ஜாகீர் கான் என இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே 10 மற்றும் 11ஆவது இடத்தில் இருக்கிறார்கள். 12வது இடத்திற்கும் இன்னும் ஒரு சுழல் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங்கையே தினேஷ் கார்த்திக் வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : 8 பந்து 4 ரன்.. பவுலிங்கில் வெங்கடேஷ் இங்கிலாந்தில் கலக்கல்.. ஹர்திக் துபே இடத்துக்கு சவால்

டி20 இல்லாத காலகட்டத்திலேயே மிக அதிரடியாக விளையாடக்கூடிய, அதே சமயத்தில் வேகப்பந்துவீச்சு ஆள் ரவுண்டராக இந்திய கிரிக்கெட்டில் தனி ஒரு வீரராக இன்று வரையில் இருக்கக்கூடிய கபில்தேவை தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யாதது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts