தற்போது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் 50 ஓவர் வடிவத்தில் ஒன் டே கப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தனது அணியை வெற்றி பெற வைத்து அசத்தி இருக்கிறார்.தற்போது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் 50 ஓவர் வடிவத்தில் ஒன் டே கப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தனது அணியை வெற்றி பெற வைத்து அசத்தி இருக்கிறார்.
வெங்கடேஷ் ஐயர் விளையாடும் வொர்செஸ்டர்ஷைர் அணி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் போகனன் 87, ஜார்ஜ் பால்டர்சன் 50 ரன் எடுத்தார்கள். வெங்கடேஷ் ஐயர் பேட்டிங்கில் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி 42 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய லங்காஷைர் அணிக்கு அந்த அணியின் கேப்டன் ஜாக் லிப்பி 14 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். இறுதியாக அந்த அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் இரண்டு விக்கெட் இருந்தது.
இந்த நிலையில் 49ஆவது ஓவரை இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் லெக்பை மற்றும் பைஸ் மூலமாக பவுண்டரிகள் சென்றது. அடுத்த நான்கு பந்துகளில் 2 வைடு மற்றும் 2 சிங்கிள் ரன் கிடைத்தது, மொத்தமாக நான்கு பந்துகளில் வெங்கடேஷ் ஐயர் 12 ரன்கள் கொடுத்துவிட்டார். எனவே அடுத்த 8 பந்துகளில் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. வெங்கடேஷ் ஐயர் ஓவரில் மீதி இரண்டு பந்துகள் இருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் 49 வது ஓவரின் ஐந்தாவது பந்தில் டாம் ஹின்லி விக்கெட்டை வெங்கடேஷ் ஐயர் கேட்ச் மூலமாக கைப்பற்றினார். இதற்கு அடுத்து புதிதாக உள்ளே வந்த ஹாரி டேர்லி விக்கெட்டை எல்பிடபிள்யு மூலமாக கைப்பற்ற, விறுவிறுப்பான இந்த போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெங்கடேஷ் ஐயர் வொர்செஸ்டர்ஷைர் அணியை திரில் வெற்றி பெற வைத்தார். ஆறு ஓவர்கள் பந்துவீசி 38 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : இந்தியா ஆஸி டெஸ்ட் மேட்ச்.. பாகிஸ்தான் கபடி ஆடறதுக்கு கூட சமமா வர முடியாது – பசித் அலி விமர்சனம்
மேலும் வெங்கடேஷ் ஐயரை தற்போது இந்தியாவில் துவங்கும் துலீப் டிராபிக்கு இந்தியத் தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை. மேலும் மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா சிவம் துபே என முயற்சி செய்வதோடு, இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டியையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முயற்சி செய்கிறது. இப்படியான புறக்கணிப்புக்கு பின்பு இந்தியத் தேர்வுக் குழுவுக்கு தன் சிறப்பான செயல்பாட்டால் வெங்கடேஷ் ஐயர் சவால் கொடுத்திருக்கிறார்!
4 runs needed in 8 balls with 2 wickets in hands.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 15, 2024
– Venkatesh Iyer got 2 wickets in 2 balls to win the match. 💥pic.twitter.com/IMU0tuSVqs






