தற்போது இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி இருவரில் யார் சிறந்தவர்? என்பது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர் பந்துவீசி 26 ரன் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். நிதீஷ் குமார் ரெட்டி இரண்டு ஓவர் மட்டும் பந்து வீசி விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. மேலும் இவர் பேட்டிங்கில் 15 பந்துகளை சந்தித்து 16 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 16 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 24 பந்தில் 52 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
ஹர்திக் பாண்டியா இடத்தில் வைக்க மாட்டேன்
இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” நான் நிதிஷ்குமார் ரெட்டியை ஹர்திக் பாண்டியா மோடில் வைக்க மாட்டேன். தற்போது நிதீஷ்குமார் ரெட்டி 4 ஓவர்கள் பந்து வீசுவதற்கான உத்தரவாதத்தில் இல்லை. இந்த காரணத்தினால் நான் அவரை ஹர்திக் பாண்டியா உடன் சேர்க்க மாட்டேன்”
“அதே சமயத்தில் நிதீஷ் குமார் ரெட்டி தொடர்ந்து விளையாடுவதின் மூலம் ஹர்திக் பாண்டியா போல உருவாக்க முடியும். மேலும் நான் அவருடைய பேட்டிங் திறமை மீது மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். மேலும் நிதீஷ் குமார் ரெட்டி நமது நாட்டின் வேகமான பீல்டர்களில் ஒருவர். இதுவெல்லாம் அவருடைய ப்ளஸ் ஆக இருக்கிறது”
நிதீஷ் குமார் ரெட்டி செய்தது சாதாரணமில்லை
மேலும் பேசி உள்ள தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” நான் அவரைப் பற்றி விரும்பக்கூடிய ஒரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஹைதராபாத் போன்ற ஒரு அதிரடியான அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் வந்து அதே அதிரடியை தொடர்ந்து எடுத்துச் செல்வது மிகவும் கடினமானது. ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா கொடுக்கும்அதிரடியான துவக்கத்தை நிதீஷ் குமார் ரெட்டி மிடில் ஆர்டரில் சிறப்பாக எடுத்துச் சென்றார்”
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர விட இந்த பையன்தான் வேணும்.. ஆஸி தொடருக்கு வாய்ப்பு கொடுங்க – முன்னாள் இந்திய செலக்டர் கோரிக்கை
“அவர் ஐந்தாறு பந்துகளை எடுத்துக் கொண்டு அதற்கு மேல் மிகவும் அதிரடியாக விளையாடினார். தொடக்க ஆட்டக்காரர்கள் கொடுத்த அதிரடியான துவக்கத்தை அவரால் தக்க வைக்க முடிந்தது. இது எளிதானது கிடையாது, நான் அவரை விரும்புகிறேன். இதுவெல்லாம் அவர் விளையாட விரும்பும் ஷாட்டை மிக உறுதியாக விளையாடக் கூடிய வீரர் என்பதை எனக்கு தெரிவிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






