இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும், அதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் இந்திய அணியில் அறிமுகமாகாத இளம் வீரர் குறித்து அவர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியாவில் இருக்கிற மைதானங்களில் வேக பந்துவீச்சை விட, சுழல் பந்து வீச்சு பெருமளவில் முக்கிய பங்கு வகிக்கும். தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் சுழற் பந்து ஜாம்பவான்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் திகழ்கிறார்கள். மேலும் ஒரு சில போட்டிகளில் இந்தியாவின் ஆல் ரவுண்டர் வீரரான வாஷிங்டன் சுந்தரும் இந்திய அணியில் இணைந்து விளையாடுவார்.
இந்த சூழ்நிலையில் இந்திய இளம் வீரரான தனுஷ்கோட்டியான் சமீபத்தில் நடைபெற்ற துலீப் டிராபி மற்றும் இராணி கோப்பையில் தனது சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். துலீப் ட்ராபி தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்களும் மேலும் 121 ரன்களும் குவித்தார். மேலும் சமீபத்தில் முடிவடைந்த இராணி கோப்பை போட்டியிலும் சிறப்பாக விளையாடி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் ஜதின் பரஞ்சப்பே தனுஷ்கோடியானை இந்திய ஏ அணியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேக்-அப் வீரராக கருதப்பட வேண்டும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “தேர்வாளர்கள் தனுஷ்கோட்டியானை இந்தியா ஏ அணியில் சேர்த்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு பேக்-அப் வீரராக சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலமாக அவரது கற்றல் திறன் சிறப்பாக இருக்கும். மேலும் அவர் வாஷிங்டன் சுந்தரை விட அதிக முதலீடு செய்யக்கூடிய வீரராக இருக்கிறார் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
இதன் மூலமாக தற்போதைய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை விட தனுஷ் கோட்டியான் மீது இந்திய நிர்வாகம் அதே கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். தனுஷ் கோட்டியான் ஒரு நல்ல ஆப் ஸ்பின்னர் என்பது மட்டுமல்லாமல் பேட்டிங் செய்யக்கூடிய ஒரு நல்ல ஆல்ரவுண்டர் வீரராகவும் இருக்கிறார். 25 வயதான இவர் இதுவரை 25 முதல் தர போட்டிகளில் விளையாடி 88 விக்கெட்கள் வீழ்த்தியதோடு இரண்டு முறை ஐந்து விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: எங்களுக்கு உண்மையாவே டி20ல 180 ரன் அடிக்க தெரியல.. அதுக்கான காரணம் இதுதான் – பங்களாதேஷ் கேப்டன் ஒப்புதல்
மேலும் பேட்டிங்கில் இரண்டு சதங்கள் மற்றும் 13 அரை சதங்களுடன் 1451 ரன்களை குவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவர் எதிர்கால இந்திய அணியில் விளையாடக்கூடிய வீரராகவும் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.