இந்திய அணியில் தொடர்ந்து ருதுராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது குறித்து இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிரிஸ் ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ருதுராஜுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அதே சமயத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி தொடர் நான்கு சதங்கள் அடித்த அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் நடந்த புறக்கணிப்பு
இந்திய டெஸ்ட் அணியில் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏற்றுக்கொள்ள முடிந்ததாக இருந்தாலும் கூட, குறிப்பாக இந்திய டி20 கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்பு மறைக்கப்பட்டு தில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதை இந்திய ரசிகர்களால் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேலும் கில்லை இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் துணை கேப்டனாக கொண்டு வந்தது மூலமாக, அவர் தொடர்ந்து இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் தொடக்க ஆட்டக்காரராக இருப்பார் என்பது முடிவாகிவிட்டது. இதன் காரணமாக ருதுராஜுக்கு அந்த அணிகளில் வாய்ப்பு கிடைப்பது மிக கடினம் என்றுதெரிகிறது.
ருதுராஜ் என்ன செய்வார்?
இது குறித்து ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “பாருங்கள் ருதுராஜுக்கு என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. பாவம் அவர் என்னதான் செய்வார். மீண்டும் சதம் அடித்தால் அவரை அணிக்குள் சேர்த்துக் கொள்வார்களா? ஆனால் அவர் உள்நாட்டில் முதல் தர கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடித்தார். ஆனால் மீண்டும் அவர் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை”
இதையும் படிங்க : பாகிஸ்தான் டி20.. ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.. மொத்தமும் புதுசு.. இந்தியாவால் புது முடிவு
“அபிமன்யு ஈஸ்வரன் செயல் திறன் சிறப்பாக இருக்கிறது நான் அவரது தேர்வை எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் ருதுராஜுக்கு என்ன செய்கிறீர்கள். ஏன் அவரை அணியில் சேர்க்க விரும்பவில்லை? அவருக்கு நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? அவர் தொடர்ந்து ரன்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நீங்கள் அவரை சரியாக இந்திய அணிக்கு என்று வரும் பொழுது விட்டுவிடுகிறீர்கள். அவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தால் இந்திய ஏ அணியில் மட்டுமே கொடுக்கிறீர்கள்” என்று கூறியிருக்கிறார்.






