ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக, இந்திய அணியின் பிளேயிங் லெவன் பேலன்ஸ் மற்றும் திலக் வர்மாவின் பேட்டிங் ஆர்டர் குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணியில் ஸ்ரேயாஸ், இஷான் கிஷன், சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி என பல பேட்டர்கள் இடம் பெற்றுள்ளதால் சரியான லெவனை தேர்வு செய்வதில் மேனேஜ்மென்ட்டிற்கு சிக்கல் எழுந்துள்ளது.
குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்கள் மற்றும் திலக் வர்மா போன்ற ஆல்ரவுண்டர்கள் இருக்கும் சூழலில், ஆபத்தான ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள தெளிவான பிளான் தேவைப்படுகிறது.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்போது “பேட்டர்களை தேர்வு செய்வதில் கண்டிப்பாக சில பிரச்சனைகள் இருக்கும். ஸ்ரேயாஸ் கேப்டனாக இருக்கிறார், இஷான் கிஷன், சாம்சன், சூர்யவன்ஷி மற்றும் ஆல்ரவுண்டராக திலக் வர்மா இருக்கிறார், இங்குதான் டீம் பேலன்ஸ் சவாலாக மாறுகிறது, அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்வார்?” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “இது மிகவும் ஸ்ட்ராங்கான ஸ்குவாட் ஆனால் பேலன்ஸ் செய்வதுதான் கடினம். இது டி20 கிரிக்கெட் என்பதால் வீரர்களின் ரோல்களை மாற்றி சோதிக்கலாம், இருப்பினும் ஆப்கானிஸ்தான் டேஞ்சரஸ் டீம் என்பதால் ரோல் க்ளாரிட்டி கொடுப்பது மிகவும் முக்கியம்” என்று கூறி முடித்துள்ளார்.






