புஜாரா ரகானே இடத்தை.. இந்த 2 பசங்க நிரப்புவாங்க.. ஆச்சரிய தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்

0
124
DK

இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார்கள் என்பது உறுதி. இந்த நிலையில் புஜாரா மற்றும் ரகானேவின் இடங்களை இந்திய டெஸ்ட் அணியில் எந்த இளம் வீரர்கள் நிரப்புவார்கள்? என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய அணி நிர்வாகம் புஜாரா மற்றும் ரகானேவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மாற்று வீரர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறது. இந்த இடங்கள் இன்னும் யாருக்கென்று முடிவாகாமல்தான் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புஜாரா – ரகானே

புஜாராவை பொறுத்தவரை ராகுல் டிராவிட் இந்திய டெஸ்ட் அணியில் விட்டு சென்ற தடுப்புச் சுவர் இடத்தை அப்படியே பின்பற்றி நிரப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதில் இவருடைய பங்குதான் மிகப்பெரியது. அந்தத் தொடரில் அதிக ரன் அடித்த வீரராக இவரே இருந்தார்.

பொதுவாக இந்திய வீரர்களுக்கு இந்திய சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் சுலபமான ஒன்றாக இருக்கும். வெளிநாடுகளில் கொஞ்சம் தடுமாறுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ரகானே முற்றிலும் மாறானவர். வெளிநாடுகளில் டெஸ்ட்
சதங்களை அடிப்பது இவருக்கு கைவந்த கலையாக இருந்தது. எனவே இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது மற்றும் ஐந்தாவது என முக்கிய இடங்களில் விளையாடி சாதித்த இவர்கள் இடத்தை நிரப்புவது எளிதானது கிடையாது.

- Advertisement -

யார் நிரப்புவார்கள்?

இதுகுறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் ரகானே இடங்களை கில் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் நிரப்ப முடியும். இவர்கள் இருவருமே நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இதையும் படிங்க : டிராவிட் மகன் சமித் டிராவிட் இந்திய U19 அணிக்கு தேர்வு.. தமிழக வீரர்களுக்கு நடந்த சோகம்.. முழு விவரம்

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இவர்கள் இருவருமே இடம் பிடிப்பார்கள். தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிப்பார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. இவர்கள் இருவராலும் புஜாரா மற்றும் ரகானேவின் பெரிய இடங்களை நிரப்ப முடியும். இந்த இருவருக்குமே தரம் மற்றும் திறமை இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -