ரோகித் வாழ்க்கையில் பிரச்சனை வந்தா.. பும்ராக்கு போன் பண்ண மாட்டாருனு நம்பறேன் – தினேஷ் கார்த்திக் பேச்சு

0
102
Rohit

இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்தி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பும்ரா நெருக்கடியான நேரங்களில் எவ்வளவு பயன் அளிக்க கூடியவராக இருக்கிறார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இந்தியாவில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா 41 விக்கெட் கைப்பற்றி வியக்க வைத்திருக்கிறார். சூழ்நிலை மற்றும் ஆடுகளத்தன்மை எதுவுமே பும்ரா பந்துவீச்சை பாதிக்காது என்பதற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கிறது.

- Advertisement -

2024 இங்கிலாந்து தொடர்

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வந்தது. இந்த தொடரில் பெரும்பாலும் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள் அடித்திருந்தார். மேலும் கில் இரண்டு சதங்கள் அடித்திருந்தார்.

இந்த நிலையில் பும்ரா அந்தத் தொடரின் நாயகன் விருதை கைப்பற்றினார். பந்து வீச்சுக்கு சாதகம் இல்லாத அந்த சூழ்நிலையில் ரிவர்ஸ் ஸ்விங், யார்க்கர் மற்றும் வேரியேஷன்களால் அற்புதமாக செயல்பட்டு இந்திய அணி தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். இதே போல் தற்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் இரண்டு போட்டிகளில் 11 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். மேலும் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

ரோகித் பும்ராவை அழைக்க மாட்டார்

பும்ரா குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “பும்ரா இது இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் பரிசு. அவரை வீரர்கள் எவ்வளவு மதிக்கிறார்கள் என்று நான் பார்த்திருக்கிறேன். ரோகித் சர்மா விஷயங்களை எளிமையாக அவருக்கு வைத்திருந்தார். போட்டியில் ஏதாவது நெருக்கடி இருந்தால் அந்த நேரத்தில் அவர் சிக்கலை தீர்ப்பதற்கு பும்ராவை அழைத்தார். இதுபோல தனிப்பட்ட வாழ்வில் ஏதாவது என்றால் அழைக்க மாட்டார் என்று நம்புகிறேன். அழுத்தத்தின் கீழ் பும்ராவை ரோகித் சிறப்பாக பயன்படுத்தினார்”

இதையும் படிங்க : ஒரே வாய்ப்புதான்.. கம்பீர் ஸார் சொன்ன அந்த வார்த்தைகள்.. என் கூடவே இருக்கு – மயங்க் யாதவ் பேச்சு

“இரண்டு நாட்களில் மெகதி ஹசனுக்கு பும்ரா இரண்டு அதிசிறந்த பந்துகளை வீசி அசத்தினார். அவர் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ரசிகர்களுக்கு சிறந்த காட்சிகளை அவர் கொடுக்கிறார். அவர் மிகவும் புத்திசாலித்தனமான வீரர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -