ஒரே வாய்ப்புதான்.. கம்பீர் ஸார் சொன்ன அந்த வார்த்தைகள்.. என் கூடவே இருக்கு – மயங்க் யாதவ் பேச்சு

0
87
Gambhir

தற்போது இந்திய கிரிக்கெட்டின் அதிவேக இளம் பந்துவீச்சாளராக இருக்கும் மயங்க் யாதவ் கம்பீர் கூறிய சில வார்த்தைகள் தன்னிடம் இப்பொழுதும் ஞாபகத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார்.

டெல்லியைச் சேர்ந்த 22 வயதான மயங்க் யாதவ் அடுத்து நடக்க இருக்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

2023 ஆம் ஆண்டு நடந்த சோகம்

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்தில் நடைபெற்றது. அந்த ஆண்டு அடிப்படை விளையான இருபது லட்ச ரூபாய்க்கு லக்னோ அணி இவரை வாங்கியது. அந்த ஆண்டு இவருக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்க இருந்தபோது, பயிற்சியில் காயம் அடைந்து ஒட்டுமொத்தமாக தொடரை விட்டு வெளியேறினார்.

இப்படியான நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான இவர் தனது அதிவேக பந்து வீச்சால் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு எதிரான போட்டியில் தனி ஒரு வீரராக அணியை வெற்றி பெற வைத்தார். மொத்தம் நான்கு போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கம்பீர் சார் கூறியது நினைவிருக்கிறது

மயங்க் யாதவ் பேசும்பொழுது “கம்பீர் பையா என்னிடம் சில வீரர்கள் தங்களை நிரூபிப்பதற்கு பல வாய்ப்புகள் கிடைக்கும், ஆனால் ஒரு சில வீரர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் கிடைக்கும் என்று முன்பு என்னிடம் கூறியிருக்கிறார். டெல்லி அணிக்காக விளையாடி இருக்கும் கம்பீர் பையாவின் வார்த்தைகள் எப்பொழுதும் என்னுடன் இருக்கின்றன”

“நான் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று இருந்தாலும் கூட எனது ஷூவுக்காக ஸ்பான்சரை தேடிக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை. மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் நான் இந்திய அணிக்காக விளையாடுவேன் என கம்பீர் பையா மற்றும் விஜய் தஹியா பையா இருவரும் எனக்கு நம்பிக்கையான வார்த்தைகள் கூறியிருந்தார்கள்”

இதையும் படிங்க : ஐபிஎல்ல தோனியை பத்தி.. அந்த விஷயத்தை சொன்னா சர்ச்சை ஆயிடும்.. மனசுக்கு சரி வரல – ஹர்பஜன் சிங் பேட்டி

“இந்திய அணிக்கு நான் தேர்வு செய்யப்பட்டது என் நண்பர்கள் எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு கூறிய பொழுதுதான் தெரிந்தது. பிறகு பிசிசிஐ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொண்டேன். நான் நண்பர்களுடன் பேசி முடித்த பிறகு என்னுடைய பழைய கால நினைவுகள் கண் முன்னால் வந்தது. நான் முதலில் சோனட் கிளப்புக்கு சென்றது. மேலும் காயம் அடைந்து என்சிஏவுக்கு வந்தது என நிறைய நினைவுகள் வந்து போனது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -