இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் ஃபார்ம் மிகவும் கவலை அடைப்பதாக இருப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வெளிப்படையான முறையில் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்கள். மொத்தம் ஆறு இன்னிங்ஸ்களில் இருவரும் தலா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து இருந்தார்கள். மேலும் கடைசி பத்து டெஸ்ட் இன்னிங்ஸ்களாக அவர்களுடைய பேட்டிங் மிகவும் சுமாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தன்னம்பிக்கை இல்லாத ரோகித் சர்மா
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதிரடியான துவக்கத்தை தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதை அப்படியே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் கொண்டு வர முயற்சி செய்கிறார். ஆனால் அவருடைய அந்த அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிவரக்கூடியதாக இல்லை. இந்திய அணிக்கு தற்பொழுது இதுவே பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.
மேலும் ரோகித் சர்மா தன்னுடைய தற்காப்பு பேட்டிங்கில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அதிரடியாக ஆடச் சென்று விக்கெட்டை கொடுத்து வருகிறார் என்கின்ற விமர்சனங்கள் வெளியில் செல்கிறது. தற்போது இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் இதே போலான விமர்சனத்தை ரோகித் சர்மாவின் பேட்டிங் அணுகுமுறை மீது வைத்திருக்கிறார்.
ரோகித் சர்மா இதை செய்யவில்லை
இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக தனது பொறுப்பை ஏற்றுக் கொண்ட காலகட்டத்தில் மிகவும் சிறப்பாக அதைச் செய்து வந்தார். ஆனால் தற்போது அவர் தன்னுடைய பேட்டிங் டெக்னிக் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால் ரோகித் சர்மா அதைச் செய்யவில்லை. தாக்கி விளையாடுவது என்பது ஒரு ஆப்ஷன் மட்டுமே. அதற்கும் உங்கள் பேட்டிங் டெக்னிக் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே சரி வரும்”
இதையும் படிங்க : கம்பீர் நீங்க டிராவிட் கிடையாது.. இது ஐபிஎல் இல்ல.. அந்த 2 நாள் திட்டம் சரி வராது – பாக் பசித் அலி கருத்து
” தடுத்து விளையாடியோ அல்லது மென்மையான ஒரு ஷாட் ஆடியோ ஆட்டம் இழந்து விடலாம் என்று அவர் நினைப்பதால், அவர் அதிரடியாக விளையாட நினைக்கிறார். இதன் காரணமாக நீங்கள் எல்லா பந்தையும் அதிரடியாக விளையாடச் சென்றால் அது பெரிய ஆபத்தை உருவாக்கக் கூடியதாக மாறுகிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு இது சரி வரலாம் ஆனால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிவராது. எனவே தன்னுடைய பேட்டிங் டெக்னிக்கை நம்பி விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.