கம்பீர் நீங்க டிராவிட் கிடையாது.. இது ஐபிஎல் இல்ல.. அந்த 2 நாள் திட்டம் சரி வராது – பாக் பசித் அலி கருத்து

0
195
Basit

இந்திய அணி முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை தவறவிடுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி தற்போதைய பயிற்சியாளர் கம்பீரை வைத்து விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருக்கிறது. மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமான முறையில் அமைந்திருந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் திட்டங்கள் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

- Advertisement -

கம்பீரின் அதிரடியான அணுகுமுறை

இந்திய டெஸ்ட் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் சேர்ந்து ஒரு நாளில் 400 ரன்களுக்கு மேல் எடுப்பார்கள் என்றால், அதை நான் ஏன் தடுக்க வேண்டும்? அப்படி திறமை இருக்கும் வீரர்கள் அவர்களுடைய வழியில் விளையாடுவது தான் சரியானது என்று கம்பீர் முன்பு கூறியிருந்தார்.

மேலும் இந்திய அணி இதே வழியில் விளையாடி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்றிருந்தது. ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை சரியானதாக அமையவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுவது? என்று தெரியாமல் சிக்கிக் கொண்டார்கள். இது குறித்து பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி டிராவிட்டை தவற விடுகிறது

இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “தற்பொழுது இந்திய அணி தங்களின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை தவற விடுகிறது. அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களுக்கு தேவையான திட்டங்களை வைத்திருந்தார். ஆனால் தற்போதைய அணி நிர்வாகம் டெஸ்ட் போட்டி இரண்டு அல்லது இரண்டரை நாட்கள் மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறது”

“ஐபிஎல் தொடரில் நீங்கள் ஒரு டெஸ்ட் போட்டியை விளையாடுவது கிடையாது. அந்தத் தொடரில் பயிற்சியாளர்கள் நாங்கள் மெதுவாக விளையாட மாட்டோம் என்று கூறுகிறார்கள். ஐபிஎல் தொடரில் அது சரியான அணுகுமுறை. ஆனால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்த அணுகுமுறை சரியானதாக இருக்காது”

இதையும் படிங்க: இந்திய அணி பவுலர்ஸ் பேட்ஸ்மேன்க்கு இந்த டெக்னிக்ல வீசுனாதான் ஆஸில ஸ்கோர் பண்ண முடியும் – சுனில் கவாஸ்கர் அறிவுரை

“எல்லோரும் பாஸ்பால் அணுகுமுறையை காப்பி அடிக்க நினைக்கிறார்கள். ஆனால் அணுகு முறையில் விளையாடும் இங்கிலாந்து இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. மும்பை ஸ்பின்னிங் டிராக் உங்களுக்கு உதவவில்லை. தற்போது நீங்கள் வேறொரு சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் தன்னம்பிக்கை பெரிய அளவில் அடி வாங்கி உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -