இந்திய கிரிக்கெட்

என் சிஷ்யன் ஜிதேஷ் சர்மா இந்தியாவுக்கு விளையாட விரும்பல.. நிலைமை இதுதான் – தினேஷ் கார்த்திக் பேட்டி

தற்போது ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா ஆரம்ப காலத்தில் இந்திய அணிக்கு விளையாட நினைக்கவில்லை என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட இவரை இந்த ஆண்டு ஆர்சிபி அணி ஏலத்தில் வாங்கியது. தினேஷ் கார்த்திக் பயிற்சியின் கீழ் மிக சிறப்பாக தயாரான ஜிதேஷ் சர்மா ஆர்சிபி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய அணிக்காக விளையாட நினைக்கவில்லை

முதலில் அவருக்கு ரிஷப் பண்ட் விபத்தில் காயம் அடைந்த காரணமாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அந்த வாய்ப்பை அவரால் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் மீண்டும் ஆசியக் கோப்பை இந்திய டி20 அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசும்பொழுது “ஜிதேஷ் சர்மா ஒருபோதும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என ஆசைப்பட்டவர் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர் மிகவும் சுதந்திரமாக இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நல்ல முறையில் விளையாடினார். பின்னர் இந்திய அணிக்கு தேர்வு ஆகி சரியாக விளையாடாத பின் அவர் விளிம்பு நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டார்”

- Advertisement -

நான் அவரை விரும்பினேன்

“இந்த நிலையில் ஜிதேஷ் சர்மாவை நான் வீரராக மிகவும் விரும்பினேன். ஏனென்றால் அவன் மிகவும் நேர்மையானவன், தீவிரமானவன். உண்மையில் முன்னேறிச் சென்று சிறப்பாக செயல்படுவதற்கு அவன் விரும்பினான். எப்படி முன்னேறி சிறப்பாக செயல்படுவது என அவனுக்கு தெரியாமல் போய்விட்டது. அதை கவனத்தில் எடுத்து அப்படியே வைத்திருந்தேன்”

இதையும் படிங்க : ஐசிசி மகளிர் உலககோப்பை 2025.. 297 சதவீதம் பரிசுத்தொகையை அதிகரித்த ஜெய்ஷா.. ஆண்களை விட அதிகம்

“அவர் என்னுடன் பணியாற்ற தொடங்கியதும் நான் அவருடைய மனநிலையை மாற்ற முடிவு செய்தேன். உங்களுக்கு தெரியும் ஒரு பயிற்சியாளராக அவருக்கு நான் எல்லாவற்றையும் கொடுப்பேன். மேலும் அவர் என்னை நம்ப வேண்டும். அவர் என்னிடம் பயிற்சி செய்ய ஆரம்பித்த முதல் நாளிலிருந்து அவருக்கு என் மீது நம்பிக்கை இருந்தது என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by