இந்திய அணி உள்நாட்டில் இந்த மாதம் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த நிலையில் பங்களாதேஷ் அணியால் இந்திய அணியை வெல்லவே முடியாது என தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பங்களாதேஷ் தரப்பில் இருந்து இந்திய அணியை வெல்ல முடியும் என சில வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் இந்திய அணி சிறப்பானதாக இருந்தாலும் கூட, பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி தங்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்து இருப்பதாக கூறுகிறார்கள்.
பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் அறிமுகம்
பங்களாதேஷ அணி 2000 ஆம் ஆண்டு முதன் முதலில் ஐசிசி இடம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான அங்கீகாரத்தை பெற்றது. அவர்களுக்கான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்கு எதிராக கொடுத்தது. அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் சுருண்டு தோற்றார்கள்.
இந்த தொடர்ச்சியான 24 வருடங்களில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றது கிடையாது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற வலிமையான அணிகளால் கூட இந்தியாவில் வைத்து இந்திய அணியை குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்துவது என்பது உலகக் கோப்பையை வெல்வதற்கு சமமானதாக இருந்து வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதிக்கம்
இந்திய அணி மட்டுமே உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பல வருடங்களாக இழக்காமல் இருந்து வருகிறது. இந்திய அணிக்கு அடுத்து வலிமையாக இருக்கும் அணியான ஆஸ்திரேலியா இந்தியாவிடம் கடைசி இரண்டு முறையாக டெஸ்ட் தொடரை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவை இந்தியாவில் வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்த முடியாது என்பது 99 சதவீதம் உறுதி.
இதையும் படிங்க :
இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு முறையில் நேரத்தை கொடுக்கும் என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கவில்லை. இந்தியாவில் வைத்து இந்திய அணியை தோற்கடிப்பது என்பது மிகப்பெரிய வேலையாகும். பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்திய அணியை அதிகம் தொந்தரவு செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறி இருக்கிறேன்.