இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வருகிற ஒன்பதாம் தேதி முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது..
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக், இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி, அதிக விக்கெட் எடுக்கும் வீரர் அதிக ரன்கள் குவிக்கும் வீரர் என தனது பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.
எட்டு நாடுகள் பங்கு பெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வருகிற ஒன்பதாம் தேதி முதல் துபாயில் நடைபெற உள்ளது. இதில் கோபையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணிகளாக இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை அணிகள் கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தயாராகும் விதமாக இந்த முறை இந்தத் தொடர் டி20 வடிவில் நடைபெற உள்ளது.
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணிக்கு சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் இந்திய அணி சரிசமமான அணியாக திகழ்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்த முறை ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் கோப்பையை வெல்லும் என்று கணித்திருக்கிறார்.
அதேபோல இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தும் வீரர் மற்றும் அதிக ரன்கள் எடுக்கும் வீரர் என இந்திய வீரர்களையே அவர் தேர்ந்தெடுத்து இருக்கிறார். சாம்பியன் கோப்பையை கைப்பற்றும் அணியாக இந்திய அணியை தேர்ந்தெடுத்துள்ள தினேஷ் கார்த்திக், அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இந்த தொடரில் துணை கேப்டன் சுப்மான் கில்லை தேர்வு செய்து இருக்கிறார். அதேபோல அதிக விக்கெட் வீழ்த்தும் வீரராக சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க:எவ்வளவு திறமைகள் வேணா இருக்கட்டும்.. ஆனா அந்த 27 வயது வீரர் இந்திய அணியில் இருக்கணும்.. ஆதரவு தெரிவித்த கெயில்
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருக்கும்போது தினேஷ் கார்த்திக் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்திருப்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இந்திய அணியில் ஜித்தேஷ் சர்மா ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் கணித்திருக்கிறார். எனவே தினேஷ் கார்த்திக் தேர்வு செய்தது போல இவர்கள் ஆச்சரியத்தை நிகழ்த்துவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.