எவ்வளவு திறமைகள் வேணா இருக்கட்டும்.. ஆனா அந்த 27 வயது வீரர் இந்திய அணியில் இருக்கணும்.. ஆதரவு தெரிவித்த கெயில்

0
85

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-2 என்ற கணக்கில் தொடரை டிரா செய்திருந்தது.

இந்த சூழ்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் இந்திய இளம் வீரர் சேர்க்கப்படாதது குறித்து தனது விமர்சனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து கேப்டனாக அணியின் இளம் வீரர் சுப்மான் கில் அறிவிக்கப்பட்டார். மேலும் இளம் வீரர்களை அணியில் எடுத்த இந்திய அணி சில போட்டிகளில் தோல்வியை தழுவினாலும் அதற்குப் பிறகு இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை டிரா செய்தது.

ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, 27 வயதான முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் சர்பராஸ் கான் இடம்பெறாதது அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போதுதான் வாய்ப்பை பெற்று சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வரும் நிலையில் அவரது நீக்கம் சரியானதாக இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கிரிஸ் கெயில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “நான் சொல்வது என்னவென்றால் அவர் டெஸ்ட் அணியிலாவது இருக்க வேண்டும். உங்களுக்கு நன்றாக தெரியும், இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் சொந்த மண்ணில் சதம் அடித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் அவரது பதிவை பார்த்தேன். அவர் எடையை குறைத்து தற்போது நன்றாக இருக்கிறார். இப்போது நன்றாக ரன்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க:342 ரன்.. இந்தியாவின் உலக சாதனையை உடைத்த இங்கிலாந்து.. தென் ஆப்பிரிக்கா மோசமாக சுருண்டு தோல்வி

அந்த மனிதர் முதல் தர கிரிக்கெட்டில் மூன்று சதங்கள் அடித்து இருக்கிறார். ஆனால் அதை அவருக்கு எதிராக இவர்கள் பயன்படுத்தும் போது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் நிச்சயமாக இதை செய்யக்கூடாது அந்த பையன் 100% அணியில் இருக்க வேண்டும். இந்தியாவுக்குள் நிறைய திறமைகள் இருந்தாலும் அந்தப் பையனுக்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று ஆதரவாக பேசி இருக்கிறார். சர்ப்ப ராஸ்கல் இது வரை 6 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 351 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -