ரோகித் கம்பீர் பயப்படறாங்க.. விராட் சாஸ்திரி செஞ்ச அந்த ட்ரிக் இவங்க கிட்ட இல்ல – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

0
442

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் தற்காப்பு திட்டத்தில் செல்வது சரியானது இல்லை என இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது ஸ்பின்னரை பிளேயிங் லெவனில் சேர்த்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. தங்களின் ஸ்பின்னர்களில் யாருக்கும் இரண்டாவது வாய்ப்பை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித் கம்பீர் திட்டம் இதுதான்

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” ரோகித் மற்றும் கம்பீர் பேட்டிங் வரிசையை பலமாக்கும் முயற்சியில் தற்காப்பாக சென்று இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களுடைய சுழற்பந்துவீச்சாளர்கள் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்து அவர்கள் இதை செய்திருக்கிறார்கள்”

“எனவே இதன் காரணமாக அவர்கள் பயப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தங்களிடம் இருக்கும் மூன்று ஸ்பின்னர்களில் யார் சிறந்த பேட்ஸ்மேனோ அவரை விளையாட வைக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் எண்ணமாக இருந்திருக்கும். ஆனால் எனக்கு இதில் உடன்பாடு கிடையாது”

- Advertisement -

விராட் கோலி ரவி சாஸ்திரி திட்டம்

மேலும் பேசி உள்ள தினேஷ் கார்த்திக் “விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதை இலக்காக கொண்டு செயல்பட்டதற்கு நாம் அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். 20 விக்கெட்டுகளை பெறுவதற்கு ஒரு யூனிட்டாக நாம் என்ன செய்ய முடியும்? என்பது தான் கேள்வியாக இருக்க வேண்டும்.அவர்கள் எப்பொழுதும் ஆறு பேட்மேன்கள் ஐந்து பந்துவீச்சாளர்கள் என்று சென்று வெற்றி பெற்றார்கள்”

இதையும் படிங்க : மற்ற பேட்ஸ்மேன்க்கு கொஞ்சம் ஈஸி.. ஆனா தோனிக்கு இதை செய்யவே முடியாது – அர்ஸ்தீப் சிங் பேட்டி

“இப்போது நிதீஷ் குமார் ரெட்டியால் கொஞ்சம் இவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர் எங்காவது விக்கெட் வீழ்த்தி கொஞ்சம் ரன்னும் எடுக்கிறார். இருந்த போதிலும் இவர்கள் பேட்டி நீளத்தை அதிகரிக்க விரும்புகிறார்கள். ஆனால் பந்துவீச்சு ஆழம் குறைவதை பற்றி கவலைப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -