இந்திய கிரிக்கெட்

வருண் போட்டி முடிந்ததும்.. தினமும் போன் பண்ணி இதை கேட்பார்.. நான் இதை சொன்னேன் – தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளராக தற்போது மாறி இருக்கும் வருண் சக்கரவர்த்தி தன்னிடம் தினமும் எப்படியான ஆலோசனைகள் கேட்பார் என்பது குறித்து தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக வரும் சக்கரவர்த்தி மொத்தம் ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். வாய்ப்பு கிடைத்த முதல் ஐசிசி தொடரிலேயே இந்திய அணிக்காக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

முன்கூட்டியே வலியுறுத்திய தினேஷ் கார்த்திக்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்படாத போது இருந்து வருண் சக்கரவர்த்தியை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி அறிவித்துவிட்ட பிறகும் கூட எப்படியாவது வருண் சக்கரவர்த்தியை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயம் இந்திய அணிக்கு தாக்கத்தை தருவார் என்று வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் பும்ரா விளையாட மாட்டார் என்று தெரிந்த உடனேயே வரும் சக்கரவர்த்தியை அவரிடம் இருக்கும் மிஸ்டரி காரணத்திற்காக உடனடியாக இந்திய அணியில் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இணைத்துக் கொண்டார்கள். மேலும் சாம்பியன்ஸ் டிராபியில் முதல் இரண்டு போட்டிகளில் பதுக்கி வைத்திருந்து முக்கிய போட்டிகளில் களம் இறக்கி சாதித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தி தினமும் கேட்பார்

வருண் சக்கரவர்த்தி குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “வருண் சக்கரவர்த்தி எப்படிப்பட்ட ஆளுமை என்றால் அவர் அதிகம் பேசக்கூடியவர் கிடையாது. எப்போதும் அவருக்குள் சில சந்தேகங்கள் இருந்து கொண்டிருக்கும். ஆனால் அவர் மைதானத்திற்குள் வந்ததும் செய்ய வேண்டியதை சரியாக செய்வார். அவர் வீச வேண்டிய மூன்று பந்துகள் எதுவென்று அவருக்குத் தெரியும். அவர் ஒரு புத்திசாலி; அவர் ஒரு கட்டிடக் கலைஞர்; அவர் ஒரு பொறியாளர். அவர் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்”

இதையும் படிங்க : 2025 ஐபிஎல் தொடரில் வெளியேறிய ஹாரி புரூக்.. 2 ஆண்டு தடை விதிக்கப்படுமா.. புதிய விதி என்ன சொல்கிறது?

“எனக்கு அவரைப் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால் அவரால் அழுத்தத்தை சரியாக சமாளிக்க முடியுமா? என்பது மட்டும்தான். அவர் போட்டி முடிந்ததும் தினமும் என்னை போனில் அழைத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்பார். நான் அதற்கு எல்லாம் சரியாக போய்க் கொண்டே இருக்கிறது என்று கூறுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts