” இந்திய அணியில் எங்களோட அடுத்த டார்கெட்… ” திட்டம்தீட்டி தமிழ்நாடு லீகில் களமிறங்கும் அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் – வீடியோ இணைப்பு

0
237
Dinesh Karthik and Ravichandran Ashwin

இங்கிலாந்து அணியுடனான டி20 தொடரை முடித்துவிட்டு டிஎன்பிஎல் தொடரில் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுகிறார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று வந்த இவர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இடம்பெற முடியாமல் திணறினார். இதற்கிடையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவிலும், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த டி20 தொடரிலும் இடம்பெற்று நன்றாக விளையாடினார்.

- Advertisement -

இவரைப்போலவே தொடர்ந்து இந்திய அணிக்குள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராடி வந்த தினேஷ் கார்த்திக் இந்த வருட ஐபிஎல் தொடரில் கீழ் வரிசையில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 330 ரன்கள் அடித்த இவர் சுமார் 185 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இதன் காரணமாக இங்கிலாந்து அணியுடனான டி20 தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அங்கும் சில போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கீழ் வரிசையில் அளித்தார்.

இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரில் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இடம் பெறவில்லை. இதற்கு அடுத்ததாக வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இவர்கள் இருவரின் பெயர் இடம்பெறவில்லை. விண்டீஸ் டி20 தொடரில் நிச்சயம் இருவரும் இருப்பார் என்று எதிர்பார்ப்புகள் நிலுவி வருகின்றன. இதற்கிடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து தீவிர பயிற்சியில் இருக்கும் விதமாக கடந்த தினம் டிஎன்பிஎல் தொடரில் இருவரும் தங்களது அணியில் இணைந்துள்ளனர்.

தினேஷ் கார்த்திக் திருப்பூர் தமிழன்ஸ் அணியிலும், அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிலும் விளையாடி வருகின்றனர். திருப்பூர் தமிழன்ஸ் விளையாடிய கடைசி போட்டியில் தினேஷ் கார்த்திக் 16 பந்துகளில் 21 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. ஞாயிறு அன்று நடைபெறவிருக்கும் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுகிறார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், “இளம் வீரர்கள் மட்டுமல்லாது மூத்த வீரர்களும் இந்த ஆண்டு நன்றாக விளையாடுகின்றனர். குறிப்பாக முரளி விஜய் கடைசி போட்டியில் 121 ரன்கள் அடித்தது அவருக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கும். அதே போட்டியில் நெல்லை அணிக்கு விளையாடிய சஞ்சய் என்பவர் சதம் அடித்ததும் அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் பக்கபலமாக இருக்கும். இந்த ஆண்டு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் போட்டிகள் நடைபெறுவதால் நானும் பங்கேற்று எனது பங்களிப்பை கொடுக்க முழு ஆர்வமாக இருக்கிறேன். வளர்ந்து வரும் வீரர்களுடனும் எனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, என்னால் முடிந்தவற்றை அணிக்காகவும் செய்து வருகிறேன்.” என்றார்.