எல்லாப் பெருமையும் ரோகித் சர்மா, ராகுல் டிராவிட்டுக்கே ! – அதிரடி பினிஷிங்க்கு பின் தினேஷ் கார்த்திக் பேச்சு

0
93
Dinesh karthick

வெஸ்ட் இன்டீஸ்க்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஷிகர் தவானின் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. இந்தத் தொடரின் நாயகன் விருதை இளம் வீரர் சுப்மன் கில் வென்றார்!

இதனையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணிக்குத் திரும்பினார்கள். இதனோடு தமிழக வீரர் ஆர்.அஷ்வினும் அணிக்குத் திரும்பினார்!

- Advertisement -

நேற்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி டிரினாட்டில் பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின் இருவரும் இடம்பெற்றனர்.

இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற வெஸ்ட்இன்டீஸ் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ய, கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சூர்யகுமார், ஸ்ரேயாஷ் ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா என ஒருவரும் நிலைக்கவில்லை.

இந்த நிலையில் டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் வழக்கம்போல் பினிசர் ரோலில் அசத்தினார். கடைசி 25 பந்துகளில் 52 ரன்கள் வர தனது அதிரடி பேட்டிங்கால் முக்கியக் காரணமாய். 19 பந்துகளில் இரண்டு சிக்ஸர், நான்கு பவுண்டரிகளோடு 41 ரன்கள் நாட்அவுட்டாக குவித்தார். இதனால் 190 ரன்களை இந்திய அணி குவித்தது. இதையடுத்து விளையாடிய வெஸ்ட் இன்டீஸ் அணியால் இருபது ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது!

- Advertisement -

வெற்றிக்குப் பிறகு பேசிய தினேஷ் கார்த்திக் சில முக்கியமான கருத்தக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் அதில் “இது மிகவும் வித்தியாசமான அணி என்று நினைக்கிறேன். நான் இந்த அமைப்பை மிகவும் நேசிக்கிறேன் என்று ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த அமைப்பைச் சுற்றியிருக்கும் அமைதியான நிலைக்கான பெருமை கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவருக்கும் போகவேண்டும். ஏனென்றால் அவர்கள் தோல்விகளை மிகவும் பகுத்தறிவான முறையில் சமாளிக்கும் சூழ்நிலையை அமைத்துள்ளார்கள். இதனால் இதற்கான முழுப் பெரமையும் அவர்களுக்கானது” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நான் நன்றாகச் செயல்படாத சமயங்களில், என்னையும் இதேபோல் அமைதியான முறையில் நடத்தப்பட்டதாக உணர்கிறேன். டிரஸ்ஸிங் அறையின் சூழல் மிகவும் அமைதியாக இருந்தது. அது நன்றாக இருந்தது. விளையாட்டின் இந்தக் காலக்கட்டத்தில் சின்ன சின்ன விசயங்களுக்கான கட்டங்களும் சரிசெய்யப்பட வேண்டியது அவசியமானது என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்!