முக்கிய வீரர் நீக்கம்.. போட்டி துவங்குவதற்கு முன்பே சிக்கலில் இலங்கை அணி!

0
182

தோள்பட்டை காயம் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் தில்சன் மதுஷங்கா இடம்பெறவில்லை என அதிகரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்கிற முனைப்பில் களமிறங்க உள்ளது.

இலங்கை அணி நிர்வாகத்திடமிருந்து இரண்டு வீரர்களின் காயம் பற்றிய அறிவிப்புகள் வெளிவந்திருக்கிறது. முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த தில்சன் மதுஷங்கா, பீல்டிங்கில் பந்தை பிடிக்க தாவியபோது தோள்பட்டையில் பலமாக அடிபட்டதால், எலும்பு பகுதி சற்று இடம் மாறியது.

அப்போதே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரை ஸ்கேன் செய்தனர். அதன்பிறகு அவர் குணமடைய ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனடிப்படையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் இருக்க மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது

அதேபோல் சமிக்கா கருணரத்னேவிற்கு முதல் போட்டியின்போது உதட்டுப் பகுதியில் அடிபட்டதால், மூன்று தையல்கள் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து போட்டியிலும் விளையாடினார். இந்நிலையில் தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டிக்கும் அவர் விளையாடலாம். எவ்வித சச்சரவு இல்லை என மருத்துவர் தெரிவித்து விட்டனர்.