LSG திக்வேஷ் ரதிக்கு ஆட தடை.. சேர்ந்து அபிஷேக்கும் சிக்கினார்.. உண்மையில் என்ன நடந்தது?

0
462
Rathi

நேற்று லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரண்டு அணிகளையும் சேர்ந்த ஜிக்வேஷ் ரதி மற்றும் அபிஷேக் ஷர்மா இருவருக்கும் அபராதத்துடன் போட்டியில் விளையாட ஒருவருக்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த போட்டிக்கு முன்பாகவே ஹைதராபாத் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்டது. இந்த நிலையில் தனது அடுத்த மூன்று போட்டிகளையும் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு ஒரு வாய்ப்போடு லக்னோ அணி இருந்தது. இந்த நிலையில் லக்னோ அணிக்கு இது மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்தது.

- Advertisement -

வழக்கம்போல் சொதப்பிய ரிஷப் பண்ட்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஸ் 39 பந்துகளில் 65 ரன்கள், எய்டன் மார்க்ரம் 38 பந்துகளில் 61 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்கள். இவர்களின் அதிரடி காரணமாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்தித் தந்தார். இதைத்தொடர்ந்து கிளாசில் 28 பந்தில் 47 ரன்கள் எடுக்க, அந்த அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 18. 2 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

ஜிக்வேஷ் ரதிக்கு தடை

இந்த போட்டியில் ஹைதராபாத்தில் அபிஷேக் ஷர்மா மிகவும் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து மேலும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் பந்து வீச்சிக்கு வந்த ஜிக்வேஷ் ரதியின் பந்துவீச்சில் அதிரடியாக ஆட முற்பட்டு ஆட்டம் இழந்தார். இந்த நேரத்தில் ஜிக்வேஷ் ரதி தனது வழக்கமான நோட்புக் செலிப்ரேஷனில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையில் களத்தில் வாய் தகராறு ஏற்பட நடுவர் வந்து பிரித்து விட்டார்.

இதையும் படிங்க : தொடரை விட்டு வெளியேறிய லக்னோ.. எங்க மோசமான நிலைக்கு காரணமே அவங்கதான்.. குறை கூறும் ரிஷப் பண்ட்

இதைத்தொடர்ந்து ஜிக்வேஷ் ரதிக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் ஒழுக்கக் குறைபாடுக்காக 5 புள்ளிகளை பெற்றிருப்பதால், அவருக்கு அடுத்த போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இவரோடு சேர்த்து அபிஷேக் சர்மாவுக்கும் 25 சதவீதம் போட்டி கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியை சேர்ந்த இவரை களத்தில் என்ன செய்தாலும் இவரது ஆக்ரோஷத்தை தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -