தொடரை விட்டு வெளியேறிய லக்னோ.. எங்க மோசமான நிலைக்கு காரணமே அவங்கதான்.. குறை கூறும் ரிஷப் பண்ட்

0
300

நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

லக்னோ அணி தோல்வி

லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. லக்னோ அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி மிச்சல் மார்ஸ் 39 பந்துகளில் 65 ரன்கள் மற்றும் மற்றொரு துவக்க வீரர் எய்டன் மார்க்ரம் 38 பந்துகளை எதிர்கொண்டு 61 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த சன்ரைசர்ஸ் அணியில் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 20 பந்துகளை எதிர் கொண்டு 59 ரன்கள் குவித்தார். இசான் கிஷான் 28 பந்துகளில் 35 ரன்கள் கிளாஸன் 28 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்கள் குவித்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 18.2 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.

- Advertisement -

பேச வேண்டாம் என்று நினைத்தோம்

தோல்வியடைந்த விதம் குறித்து ரிஷப் பண்ட் பேசும்போது ” இது எங்கள் அணிக்கு சிறப்பான சீசன்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் போட்டிக்குள் வரும்போது நிறைய காயங்கள் மற்றும் இடைவெளிகள் இருந்தன. ஒரு அணியாக நாங்கள் அதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தோம். ஆனால் எங்கள் அணியில் இருந்த இடைவெளிகளை நிரப்புவது கடினமாகிவிட்டது. எங்களிடம் நாங்கள் ஏலத்தை திட்டமிட்ட போது இருந்த அதே பந்துவீச்சு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் நடக்கும் சில நேரங்களில் நடக்காது.

இதையும் படிங்க:206 ரன்.. டி20யில் வங்கதேசத்தை வீழ்த்தி வரலாறு படைத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.. கேப்டன் வாசிம் சேஸிங்கில் சாதனை.. முழு விபரம்

இருப்பினும் இந்த சீசனில் நல்ல விஷயங்களை நாங்கள் எடுத்துக் கொண்டு முன்னேற போகிறோம். எங்களிடம் வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது. ஆனால் சீரற்ற பந்துவீச்சினால் தேவையான ஆட்டங்களில் வெற்றி பெற முடியவில்லை. நாங்கள் இந்த போட்டியில் 10 ரன்கள் குறைவாக எடுத்தோம். அதுதான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இந்த சீசனில் பந்துவீச்சாளர் திக்வேஸ் ரதி எங்களுக்கு நல்ல தேர்வாக அமைந்திருக்கிறார்” என ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார். 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் லக்னோக அணிக்கு இது ஏழாவது தோல்வியாகும். இதன் மூலமாக பிளே ஆப் சுற்றில் இருந்து லக்னோ அணியும் ஏறக்குறைய வெளியேறிவிட்டது.

- Advertisement -