கடைசி ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்க நினைத்தீர்களா? – சூரிய குமாருடன் விராட்கோலி ஜாலி அரட்டை ; வீடியோ இணைப்பு!

0
78
Sky

இந்தியாவின் 15வது ஆசிய கோப்பை தொடரில் முதல் சுற்றில் தனது கடைசி மற்றும் இரண்டாவது போட்டியில் அணியுடன் மோதி 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் இந்திய பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் அடி வாங்கினாலும், பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் போது ஜொலிக்காத சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி மீண்டு வந்தது இந்திய அணி நிர்வாகத்திற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்!

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இது ஒருவிதத்தில் இந்திய அணிக்கு இந்த தொடரில் பயிற்சியாக அமைந்தது. ஒருவேளை இந்திய அணி டாஸ் ஜெயித்து இருந்தால் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கலாம்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் கோல்டன் டக் அடித்த கே எல் ராகுல் இந்த போட்டியில் முப்பத்தி ஒன்பது பந்துகளை சந்தித்தாலும் அதனால் அழிக்க எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தித் தர முடியவில்லை. அவர் பேட்டிங்கில் மிகுந்த தடுமாற்றத்துடன் காணப்பட்டார் மேலும் 6 ரன்கள் மட்டுமே அடித்தார்.

அந்த ஆட்டத்தில் 13வது ஓவரின் கடைசி பந்தில் கேஎல் ராகுல் ஆட்டமிழக்க இந்திய அணி 94 ரன்கள் எடுத்திருந்தது. பின்பு களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதற்கடுத்து இருபத்தியாறு பந்துகளை சந்தித்து அறுபத்தி எட்டு ரன்களை குவித்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடக்கம்.

குறிப்பாக மித வேகப்பந்து வீச்சாளர் ஆட்டத்தின் கடைசி ஓவரை வீச அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் 4 சிக்சர்களை பறக்கவிட்டார். முதல் மூன்று பந்துகளை ஹாட்ரிக் சிக்ஸர்களாக அடித்த சூர்யகுமார் யாதவ், 4-வது பந்தை தவறவிட்டார், 5வது பந்தில் மீண்டும் சிக்சர் அடித்தார், ஆறாவது பந்தில் 2 ரன்கள் வந்தது. மொத்தம் அந்த ஓவரில் மட்டும் இருபத்தி ஆறு ரன்கள் சூரியகுமார் குவித்தார். ஒரு சர்வதேச டி20 போட்டியில் கடைசி ஓவரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுதான்.

- Advertisement -

இந்தப் போட்டிக்குப் பிறகு, இந்தப் போட்டியில் சேர்ந்து பேட்டிங் செய்த விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் ஒரு ஜாலியான அரட்டையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது சூரியகுமார் யாதவிடம் விராட் கோலி கடைசி ஓவரில் நீங்கள் 6 சிக்சர்களை அடிக்க நினைத்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ் ” நான் என்னால் முடிந்த சிறப்பானதை செய்ய நினைத்தேன். ஆனால் யுவி பாவை கடந்து செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை ” என்று கூறி சிரித்தார். அந்த சிரிப்பில் உடனே விராட் கோலியும் இணைந்து கொண்டார். அடுத்து இதைப்பற்றி விராட் கோலி கூறும்பொழுது ” அது ஒரு மாயாஜாலம் ஓவர். ஸ்டூவர்ட் ப்ராட்க்கு எதிராக பிரமிக்கத்தக்கது அது” என்று கூறினார். மேலும் இருவரும் ஜாலியாக பேசிய வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!