விராட் கோலி இந்த அளவுக்கு வருவார்னு நீங்க நினைச்சிங்களா? சேவாக் பளிச் பதில்!

0
1990
Sehwag

மாடர்ன் கிரிக்கெட் காலத்தில் இந்திய கிரிக்கெட்டை வழிநடத்தி சென்றவர்களில் சச்சின் மிக முக்கியமானவர். இந்தியா கிரிக்கெட்டில் ஒரு முழுமையான அணியாக ஒருங்கிணையாத காலகட்டத்தில் சச்சின் தனி ஒருவராக பல ஆட்டங்களில் போராடி கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு என ஒரு இடத்தை அந்த காலகட்டத்தில் தக்க வைத்திருந்தார்!

பின்பு கங்குலி தலைமையில் இந்திய கிரிக்கெட் ஆக்ரோஷமான முறையில் விளையாடி அடுத்த கட்டத்திற்கு நல்ல நகர்ந்தது. ஆனால் குறிப்பிடத்தக்க பெரிய வெற்றிகள் எதையும் பெரிதாக ஈட்டிக் கொள்ள முடியாத அணியாகவே இருந்தது!

- Advertisement -

பிறகு மகேந்திர சிங் தோனி அணிக்குள் வர அவரது தலைமையில் திறமையான வீரர்கள் ஒன்றிணைய இந்திய கிரிக்கெட் புதிய உச்சத்தை தொட்டு உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி குறிப்பிடும்படி பல வெற்றிகளை பெற்றது.

மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி காலகட்டத்தில் மூத்த வீரர்களான சச்சின், சேவாக், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்களது பங்களிப்பை மிகச் சிறந்த முறையில் அளித்து வர, போலவே இளம் வீரர்களும் ஜொலிக்க ஆரம்பித்தார்கள். இதில் மிகவும் முக்கியமானவர் இன்று உலக கிரிக்கெட்டில் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி.

சச்சினுக்கு அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்களைக் கடந்து அதிக சதம் அடித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி குறித்து சில முக்கியமான விஷயங்களை இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரர் சேவாக் பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி குறித்து சேவாக் பேசும் பொழுது ” விராட் கோலி மிகவும் திறமையானவர் என்பதை நாங்கள் அப்போது எல்லோருமே அறிவோம். ஆனால் அவர் இந்த நிலைக்கு உயர்வார் என்று நான் நினைக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் இலங்கை அணி முத்தரப்பு தொடரில் விராட் கோலி லசீத் மலிங்காவுக்கு எதிராக பேட் செய்த விதம், அவர் வெற்றி பெறுவார் ஆனால் இவ்வளவு தூரம் பெரிய வெற்றி பெறுவார் என்று நான் நினைக்காதது தவறு என்று நிரூபிக்கும் படி இருந்தது. அவர் தற்போது சாதித்துள்ளது நம்ப முடியாத ஒன்று! என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை விராட் தனது ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கையிலேயே உணர்ந்து கொண்டார். மிகக் குறைவான வீரர்களே இதை சீக்கிரத்தில் உணர்ந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் பல வீரர்கள் வந்தார்கள் சென்றார்கள். பின்னர் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் வொயிட்பால் கிரிக்கெட்டுக்குள் வந்தார். இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. சில சமயங்களில் இது போன்ற போட்டிகள் உங்கள் முன்னேற்றத்தை மேம்படுத்த உதவும்! என்று கூறி இருக்கிறார்!