ஏசிசி ஆசிய கோப்பைக்கு இந்திய சின்ன பசங்கள அனுப்ப சொல்லி நாங்க கேட்டமா? – பாகிஸ்தான் ஏ கேப்டன் கோபம்!

0
1719
Harris

சமீபத்தில் இலங்கையில் வைத்து ஆசிய நாடுகளைச் சேர்ந்த வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது!

இந்தத் தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியோடு மோதிய இந்திய அணி மிகப்பெரிய அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தமிழக வீரர் சாய்சுதர்ஷன் ரன் துரத்தலில் சிக்ஸர் அடித்து சதம் கண்டு ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து நடந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தயாப் தாஹிர் அதிரடியாக விளையாடி சதம் அடிக்க 352 ரன்கள் பாகிஸ்தான அணி குவித்தது. மேலும் அந்த அணியின் துவக்க வீரர்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணியால் பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் திருப்பி பதிலடி தர முடியவில்லை. அவர்கள் பேட்டிங் மட்டுமல்லாது பந்து வீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியை கொடுத்தார்கள்.

இதன் காரணமாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் போது களத்தில் இரு அணி வீரர்களுக்கும் இடையே சிறு சிறு உரசல்கள் ஏற்பட்டது.

- Advertisement -

மேலும் இந்த தொடருக்கு பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் சிலர் பங்கேற்றார்கள். அதே சமயத்தில் இந்திய அணியின் தரப்பில் சர்வதேச போட்டியில் விளையாடிய ஒரு வீரருக்கு கூட இடம் அளிக்கப்படவில்லை.

பாகிஸ்தான் வெற்றியடைந்ததற்கு பிறகு சமூக வலைதளங்களில், இந்திய அணி வளர்ந்து வரும் வீரர்களை அனுப்பி நேர்மையாக விளையாடியது, ஆனால் பாகிஸ்தான் அணி அப்படி இல்லாமல் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களை அனுப்பி விளையாடி வென்றது என்று பதிவுகள் சலசலப்பை உருவாக்கின.

இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் ஏ அணியின் கேப்டன் முகமது ஹாரிஸ் இது பற்றி கூறுகையில் “பல சீனியர் வீரர்களைக் கொண்ட அணியை பாகிஸ்தான் இந்த தொடருக்கு அனுப்பியதாக கூறுகிறார்கள். நாங்கள் ஒன்றும் இந்தியாவை சிறு குழந்தைகளை கொண்ட அணியை அனுப்பி வைக்குமாறு கேட்க கிடையாது.

எங்கள் அணியில் சர்வதேச போட்டி அனுபவம் கொண்ட வீரர்கள் பலர் இருந்ததாக சொல்கிறார்கள். ஆனால் மொத்தமாக அப்படி எத்தனை பேர் இருந்து விட்டார்கள்? ஆனால் இந்த தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்ற வீரர்களில் பல வீரர்கள் பல முன்னணி ஐபிஎல் அணிகளுக்காக விளையாட கூடியவர்கள். மொத்தமாக சேர்த்து அவர்கள் 260 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர்கள். ஐபிஎல் போட்டிகள் ஒன்றும் சாதாரணமானது கிடையாதே!” என்று கோபமாக கூறியிருக்கிறார்!