“சச்சின் ரெக்கார்ட காப்பாத்த கோலிக்கு ரெஸ்ட்னு சொன்னனா?” – ஆடம் கில்கிரிஸ்ட் பதிலடி!

0
4596
Virat

இந்திய அணி அடுத்த இரண்டு மாதங்களில் குறைந்தபட்சம் 12 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

டி20 கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சியில் இந்த அளவுக்கு இரண்டு மாதங்களில் ஒருநாள் கிரிக்கெட் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறியிருக்கிறது.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் குறுகிய இடைவெளியில் இவ்வளவு போட்டிகள் இந்திய அணிக்கு கிடைக்கிறது.

இதன் காரணமாக தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட்டில் 47 சதங்கள் எடுத்திருக்கும் விராட் கோலி, சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்துள்ள 49 சதங்கள் என்கின்ற உலகச் சாதனையை உடைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் விராட் கோலிக்கு தொடர்ந்து இந்திய அணி நிர்வாகத்தால் ஓய்வு கொடுக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

- Advertisement -

ஆசிய கோப்பையை எடுத்துக் கொண்டால் இந்திய அணி மொத்தம் ஆறு போட்டிகளில் விளையாடியது. அதில் மூன்று போட்டிகளில் மட்டுமே விராட் கோலி பேட்டிங் செய்தார். இரண்டு போட்டிகளில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வரவில்லை. ஒரு போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இப்படி அவர் மூன்று போட்டிகளை இழந்தார்.

அடுத்து தற்பொழுது நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக சச்சின் அடித்துள்ள 49 சதங்கள் என்கின்ற சாதனையை விராட் கோலி முறியடிக்க கூடாது என்பதற்காகத்தான் தற்பொழுது அவருக்கு தொடர்ச்சியாக ஓய்வு கொடுக்கப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவுகிறது.

இந்த வகையில் இப்படியான கருத்தை லோகேஷ் சைனி என்பவர் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் பெயரில் பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட் கில்கிரிஸ்ட் கவனத்துக்கு வர, அதற்கு உடனே மறுப்பு தெரிவித்த அவர் நான் இப்படி கூறவில்லை என்று மறு ட்வீட் செய்திருக்கிறார். தற்பொழுது சமூக வலைதளங்களில் இது வைரலாக மாறி வருகிறது!