விராட் கோலியின் ஓய்வு பற்றி மறைமுகமாக பேசினாரா ராகுல் டிராவிட்.?

0
525

இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது . இரண்டு அணிகளுக்கும் இடையே ஆண்ட முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணி விளையாடப் போகும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும் . மறுபுறம் மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை காண தகுதி சுற்றுப் போட்டிகளில் தோல்வி அடைந்து உலகக்கோப்பையில் தகுதி பெறும் வாய்ப்பை முதல் முறையாக இழந்திருக்கிறது .

- Advertisement -

இதனால் இரண்டு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது மேலும் இந்த டெஸ்ட் தொடரானது 2023-2025 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இடம் பெற்றுள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது .

2011 ஆம் ஆண்டு இந்திய அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இதே டோமினிக்கா மைதானத்தில் வைத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமானார் . அந்தப் போட்டியில் இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் மூத்த வீரராக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது . தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராகவும் விராட் கோலி அணியின் சீனியர் வீரராகவும் இந்த டெஸ்ட் தொடரை சந்திக்க இருக்கின்றனர் .

இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருக்கும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விராட் கோலி கடந்த 12 வருடங்களில் டெஸ்ட் போட்டிகளில் தன்னை எவ்வாறு உலகின் சிறந்த பேட்ஸ்மனாக வெளிப்படுத்தினார் என்று பாராட்டி இருக்கிறார் மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை நினைவு கூர்ந்து அவர் நான் பயிற்சியாளராக மீண்டும் இதே மைதானத்தில் இந்திய அணியை வழி நடத்துவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசியவர் 2011 ஆம் ஆண்டு இளம்பிறதாக வந்த விராட் கோலி இன்று டெஸ்ட் போட்டிகளில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வந்திருக்கிறார் . அவரது சிறப்பான திறமையை காட்டுகிறது . மேலும் எவ்வளவு காலத்திற்கு அவர் விளையாடுவார் என்று தெரியாது ஆனால் அவரது சாதனைகளை நினைத்து அவர் பெருமைப்படலாம் எனக் கூறியிருக்கிறார் .

இந்தப் பேட்டியின் மூலம் ராகுல் டிராவிட் விராட் கோலியின் ஓய்வை பற்றி மறைமுகமாக தெரிவித்திருக்கிறாரா என கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கேள்வியை எழுப்பி இருக்கின்றனர் . இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சி கால முடிவடைகிறது . மேலும் உலகக்கோப்பை முடியும் தருவாயில் விராட் கோலி 35 வயதை நிறைவு செய்திருப்பார் . தற்போது டி20 போட்டிகளில் இருந்து தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட்டு வரும் விராட் கோலி உலக கோப்பைக்கு பிறகு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எவ்வளவு காலம் விளையாடுவார் என்று தெரியவில்லை . இந்த நேரத்தில் ராகுல் ராபின் பேட்டி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.